Header Ads

இளம்பெண்ணை பியூட்டி பார்லருக்கு அனுப்பி நகையுடன் காதலன் மாயம்

தூத்துக்குடி: ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் சுபா (25) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் நடந்த இவர்களது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சுபா குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு அழகான வாலிபர் சுபாவிடம் வலிய வந்து அறிமுகமாகியுள்ளார். தனக்கு சொந்த ஊர் மதுரை என்றும், தனது பெயர் ஸ்ரீராம் என்றும் கூறியுள்ளார்.சுமாராக இருக்கும் நம்மிடம் அழகிய வாலிபர் வலிய வந்து பேசுகிறாரே என உருகிய சுபா, தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். ஊர் திரும்பியதும் இருவரும் செல்போனில் பேசி பேசியே காதலை வளர்த்துள்ளனர். ஒரு வாரமான நிலையில், அந்த வாலிபர் சுபாவை திருமணம் செய்து கொள்ளலாம் வா எனக் கூறி மதுரைக்கு அழைத்துள்ளார். இதனால் அவர் வீட்டிலிருந்து 10 பவுன் நகைகளை எடுத்து அணிந்து கொண்டு சில நாட்களுக்கு முன் மதுரை சென்றுள்ளார்.

அங்கு அவரது காதலன் ஸ்ரீராம், சுபாவிடம் தூத்துக்குடியில் தனது நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி தூத்துக்குடிக்கு அழை த்து வந்துள்ளார். இங்கு வந்ததும், ‘நீ மிகவும் கருப்பாக இருப்பதால் பியூட்டி பார்லரில் சென்று அழகுபடுத்திக் கொள்ளலாம் வா‘ என தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு அழைத்து சென்றுள்ளார்.

பியூட்டி பார்லர் உள்ளே செல்லும்போது, சுபாவிடம் ஸ்ரீராம், ‘அழகுபடுத்தும்போது நகைகள் அணியக் கூடாது. எனவே, அவற்றை கழற்றி என்னிடம் கொடுத்துவிடு‘ எனக் கூறியுள்ளார். இதையடுத்து, சுபாவும் தான் அணிந்திருந்த 10 பவுன் நகைகளையும் ஸ்ரீராமிடம் கழற்றி கொடுத்து விட்டு சென்றுள்ளார்.  இரண்டரை மணி நேரத்திற்கு பின் சுபா வெளியில் வந்தபோது, ஸ்ரீராம் மாயமாகியிருந்தார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. பின்னர் தான் அவர் 2.50 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் கம்பி நீட்டியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சுபா செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார். போலீஸ் விசாரணையில் ஸ்ரீராம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் போலீசார், சுபாவிற்கு அறிவுரை கூறி அவரது சொந்த ஊருக்கு பஸ் ஏற்றி விட்டனர். இந்த நூதன மோசடி தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.