Header Ads

வித்யாசாகர் எங்கே?

தமிழ் சினிமாவின் முக்கிய இசை அமைப்பாளர்களில் ஒருவர் வித்யாசாகர். 2010ம் ஆண்டு ஒரு வருடத்தில் 5 திரைப்படங்களுக்கு இசை அமைத்து முதல் இடத்தில் இருந்தார். அதற்கு பிறகு அவர் இசை அமைக்கும் படங்கள் மிகவும் குறைந்து விட்டது. 2011ம் ஆண்டு தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்ற படத்திற்கு மட்டும் இசை அமைத்தார். 2012ம் ஆண்டு எந்த தமிழ் படத்திற்கும் இசை அமைக்கவில்லை. 2013ம் ஆண்டு 3 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இந்த ஆண்டு இதுவரைக்கும் படங்கள் இல்லை. தற்போது விக்ரம் நடிப்பில் தரணி இயக்க இருக்கும் படத்திற்கு இசை அமைக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. தற்போது மலையாள படங்களில் அதிகமாக இசை அமைத்து வரும் வித்யாசாகர் தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? அல்லது தமிழ் வாய்ப்புகள் கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.
பூவெல்லாம் உன் வாசம், ரன், தூள், கில்லி, மொழி, அன்பே சிவம், பார்த்திபன் கனவு, சந்திரமுகி படங்களில் இசை சாம்ராஜய்த்தை நிகழ்த்திக் காட்டிய வித்யாசாகர் இப்போது மவுனித்து இருப்பது ஏன்? அவர்தான் விடை சொல்ல வேண்டும்.

No comments:

Powered by Blogger.