நாயுடன் வாக்கிங் சென்ற தம்பதியருக்கு கிடைத்த தங்கப் புதையல்
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தம்பதியர் நாயுடன் வாக்கிங் சென்றபோது கிடைத்த தங்க நாணய புதயலை கண்டு திக்குமுக்காடிப் போய் உள்ளனர்.
5, 10 மற்றும் 20 அமெரிக்க டாலர் நாணயங்களாக 1427 தங்க நாணயங்கள் இவர்களுக்கு கிடைத்துள்ளன. இந்த நாணயங்கள் 1847 மற்றும் 1894-ம் ஆண்டுகளுக்கிடையில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கக் கூடும் என தொல்லியலாளர்கள் கூறுகின்றனர்.
நாணய தயாரிப்பு கூடத்தில் இருந்து மக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாகவே தங்கசாலையில் இருந்து கடத்திவந்த சிலர் இவற்றை பிற்கால தேவைக்காக பதுக்கி வைத்திருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.
இந்த நாணயங்களின் தற்கால முக மதிப்பு 28 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் தான். ஆனால், இவற்றில் சில நாணயங்கள் மிகவும் அரிதானவை என்பதால் இவை ஒவ்வொன்றும் 10 லட்சம் டாலர்கள் வரை விலை போகும் வாய்ப்பும் உள்ளது என பழங்கால நாணயங்களை வாங்கி விற்கும் சிலர் தெரிவித்தனர்.
எனினும், வாக்கிங் போகும் போது ஒரு மரத்தின் கீழே இருந்த மண்ணை நாய் தோண்டிய போது இந்த தங்கப் புதையல் கிடைத்திருப்பதால், இதை நாயால் கிடைத்த அதிர்ஷ்டம் எனவே கருத வேண்டியுள்ளது.
No comments: