தொகுதிக்காக நிதி செலவழிக்காத சச்சின் டெண்டுல்கர், ரேகா
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரபல இந்தி நடிகை ரேகா ஆகியோர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணைய தளப்பகுதியில், "எம்.பி.க்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரேகா ஆகிய இவர்கள் இருவரும் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உள்ளூர் வளர்ச்சி நிதியிலிருந்து எதுவும் செலவழிக்கவில்லை" என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது நிதியிலிருந்து ரூ.5 கோடி வரை உள்ளூர் வளர்ச்சி நிதித்திட்டத்தின் கீழ் தங்கள் தொகுதிக்காக செலவழிக்கலாம். மேலும் இவ்வுறுப்பினர்கள் ஏதாவது ஒரு பின்தங்கிய மாவட்டத்தை தத்தெடுக்கலாம். இத்திட்டத்தின் கீழ் மும்பை புறநகர் பகுதியை சச்சின் டெண்டுல்கர் தத்தெடுத்துள்ளார். ஆனால் ரேகா இதுவரை எந்தவொரு மாவட்டத்தையும் தத்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவம் தங்களது தொகுதி மேம்பாட்டிற்காக ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை. இவர்களது நிதிக்கணக்கில் ரூ.10 கோடி இருப்பு அப்படியே உள்ளது.
No comments: