தயாரிப்பாளருங்க வீட்டு கதவை தட்டும் இயக்குநர்!
கில்லி நடிகரின் மாவட்டம் படத்தை எடுத்த நேசமான இயக்குனர் அடுத்து நான்கு பக்கா ஆக்ஷன் கதைகளோடு பெரிய ஹீரோக்களின் வீட்டுக் கதவை தட்டினாராம். "மாவட்டத்தின் உண்மையான நிலவரம் எங்களுக்கு தெரியும் போயிட்டு வாங்க"ன்னு திருப்பி அனுப்பி கதவை சாத்திட்டாங்களாம். மாவட்டம் படத்துக்கு முன்னாடி "அடுத்து எனக்குத்தான் நீங்க படம் பண்ணித்தரணும்"னு சொன்ன ஹீரோக்கள் எல்லாம் இப்போ "எனக்கு எதுக்கு நீங்க படம் பண்ணணு"ம்னு கேக்குறாங்களாம். வெறுத்துப்போன இயக்குனர் பெரிய ஹீரோ சப்ஜெக்ட் கதைகளை தூக்கி போட்டுவிட்டு இப்போது புதுமுகங்களுக்கு ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி தயாரிப்பாளருங்க வீட்டு கதவை தட்டிக்கிட்டிக்காராம். மாவட்ட படம் தனக்கு மாநிலத்தையே தரும்னு நினைச்சவருக்கு ஊராட்சி கிடைக்கிறதே பெரும் போராட்டமாக இருக்காம்.
No comments: