Header Ads

தோழிகள் ஜாக்கிரதை!

ஹீரோவுக்கு நண்பர்களாக இருந்து அவஸ்தைப்படுறவங்களோட மைண்ட்வாய்ஸை எழுதியவுடன், ஹீரோயின் தோழிகள் என்ன பாவம் செஞ்சாங்க, அவங்களைப் பற்றியும் எழுதுங்க என்று ஏகப்பட்ட கோரிக்கைகள். அதான் பாஸ், உங்களுக்காக...
பார்க்க மொசக்குட்டி மாதிரி புஸுபுஸுன்னு நாங்க அழகா இருந்தாலும் வெறச்ச கோழி மாதிரி இருக்கிற ஹீரோயினை வெரட்டி வெரட்டி ஹீரோ லவ் பண்ணுவாரு. நாங்களும் மனசாட்சியே இல்லாம அந்தக் காதலுக்குத் தூது போகணும். இந்தப் பொழப்புக்கு...
ஹீரோயின் மட்டும் அப்பா பேச்சைக் கேட்டு வளரும் பிள்ளை மாதிரியும் அவர் கௌரவத்தைக் காப்பாத்துற பொண்ணு மாதிரியும் ரொம்ப பில்டப் கொடுப்பாய்ங்க. கூடவே சுத்துற எங்களையெல்லாம் கண்டிக்க ஆள் இல்லாமத் தண்ணி தெளிச்சுவிட்ட மாதிரி காட்டிட்டு, கடைசியில் ஹீரோயின் நல்லவனாப் பார்த்து லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்குவாங்க. எங்களை ஒரு குடிகாரனுக்கோ, பொறுக்கிக்கோ கட்டிக் கொடுத்துடுவாங்க. ஏங்க இந்த ஓரவஞ்சனை?
அதென்னமோ தெரியலை, என்ன மாயமோ புரியலை, ஹீரோயின் பணக்காரியா இருந்து ஏழை ஹீரோவைக் காதலிச்சா, பணக்காரத் தோழியா வருகிற நாங்களும் அந்தம்மாவோட சேர்ந்து சமூகசேவை செய்றோம்கிற பேர்ல சாக்கடையைச் சுத்தம் பண்ணணும், மாட்டுச்சாணம் அள்ளணும், குழந்தைகளைக் குளிப்பாட்டிவிடணும். ஏம்மா ஹீரோயினு ஒங்க காதலுக்கு நாங்கதான் ஊறுகாயா?
கோயில் விசேஷம், ஊர்த் திருவிழானு வந்துட்டாப் போதும், கடை பஜாருக்கு ஹீரோயின்கூடவே பாதுகாப்பு அதிகாரி மாதிரிப் போகணும். நாங்க பார்க்கிறப்பவே அவங்களுக்கு ரிப்பன், கண்ணாடி வளையல், கொண்டை ஊசின்னு ஹீரோ விதவிதமா வாங்கிக் கொடுப்பாரு. கூட வந்திருக்காளேனு ஒரு குருவிரொட்டி கூட நமக்குக் கெடைக்காது. உங்க கூட பஜாருக்கு வந்ததுக்குக் கோயிலுக்குப் போயிருந்தா, பொங்கச்சோறும் புளியோதரையுமாவது கிடைச்சிருக்கும்.
நமக்கு அண்ணன், தம்பி இருக்கிறதா காட்டுறாங்களோ இல்லையோ, ஹீரோயினுக்கு அண்ணனும் தம்பியும் கட்டாயம் இருப்பாங்க. என் தங்கச்சி ரொம்ப நல்லவ, உன்கூட சேர்ந்துதான் இப்படி ஆயிட்டானு ஒரு மொக்கை டயலாக்கைப் பேசி நம்மளை மிரட்டுறதுக்காக ஹீரோயினோட ஃப்ரெண்டாக் கோத்துவிட்ருவாய்ங்க.  
இன்னைக்கு வரைக்கும் ஒண்ணே ஒண்ணு மட்டும்தான் மாறாம இருக்கு. அது என்னன்னா, அந்த முள்ளுக்காட்டு வழியா ஹீரோயின்கூட காலேஜுக்கு சைக்கிள்ல எத்தனை தடவை போயிட்டு வந்தாலும் எங்க சைக்கிள் மட்டும் பஞ்சரே ஆகாது. நம்பிக் கட்டுற கம்பிங்கோ!

No comments:

Powered by Blogger.