Header Ads

ஜெனீவாவில் தப்பித்துக்கொள்ள சூசையின் மனைவி மற்றும் சு.ப.தமிழ்ச்செல்வன் மனைவியை வைத்து காணொளி தயாரிப்பு!!

ஜெனீவாவில் தப்பித்துக்கொள்ள 20 நிமிடக் காணொளியைத் தயாரிக்கிறது மகிந்த அரசாங்கம்!! சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆதாரக் காணொளிக்குப் பதிலாக 20 நிமிட ஆவணக் காணொளியைச் சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து வருகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் சிறீலங்கா அரசாங்கம் மீதுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே இக்காணொளி தயாரிக்கப்படுகின்றது.

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காணாமல் போன அல்லது கொலை செய்யப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரைக் வைத்தே இக்காணொளி தயாரிக்கப்படுகின்றது. அத்துடன் போருக்குப் பின்னரான அமைதி நிலை குறித்தும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாம். தற்போது இக்காணொளி தயாரிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவை அவர்களின் சம்மதமின்றி மிரட்டலின் அடிப்படையில் பெறப்பட்ட பதிவு என்னதற்கும் அப்பால் விடுதலைப்புலிகளின் முன்னால் அரசியற்துறைப் பெறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மனைவியின் வாய் அசைவிற்கு அவரின் குரலை உடைய ஒருவரின் குரல் பயன் படுத்தப்பட்டுள்ளதுடன் இவ் ஒலிப்பதிவுகள் திட்டமிட்டு இலங்கை அரசால் புனையப்படும் புனை கதை என கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத் தக்கது

No comments:

Powered by Blogger.