சூர்யா ஜென்டில்மேன் சொல்கிறார் சமந்தா
சென்னை: சூர்யா ஒரு ஜென்டில்மேன். அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்கிறேன் என்றார் சமந்தா.லிங்குசாமி இயக்கும் Ôஅஞ்சான்Õ படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார் சமந¢தா. அவர் கூறியது:Ôஅஞ்சான்Õ பட ஷூட்டிங் பரபரப்பாக நடக்கிறது. செட்டில் இருக்கும் எல்லோருமே கடுமையான உழைப்பாளிகள். இது ஒரு பக்கா டீம். சூர்யாவுடன் முதல் முறையாக நடிக்கிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன். கோஆர்ட்டிஸ்ட்களுடன் நடந்துகொள்ளும் முறை, கேமராவுக்கு முன்னால் கேரக்டராக மாறும் திறன் ஆகியவை மட்டுமல்ல. மனிதாபிமானத்தாலும் சூர்யா சிறந்தவராக இருக்கிறார். அவரை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்கிறேன். சமீபத்தில் ÔகோலிசோடாÕ படம் பார்த்தேன். தமிழ் சினிமா நல்லதொரு திசையில் சென்றுகொண்டிருக்கிறது. இதுபோன்ற படங்கள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. நல்ல சினிமா உருவாக அர்த¢தமுள்ள படங்கள் நிறைய வர வேண்டும். இப்படி சொல்வதால் நான் கமர்ஷியல் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக அர்த்தமில்லை. தெலுங்கில் இந்த வருடம் ரிலீசாக உள்ள எனது எல்லா படங்களுமே ஹீரோயிசம் கொண்ட ஆக்ஷன் படங்கள்தான்.
No comments: