டி டே படத்தை தமிழில் வெளியிட ஸ்ருதிஹாசன் அனுமதி தேவையில்லை தயாாிப்பு நிறுவனம் காட்டம்
கடந்த ஆண்டு ஸ்ருதி ஹாசன் ஹிந்தியில் நடித்து வெளியான படம் டி டே(D-Day). இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். அதனால் அந்த படத்தில் அவர் அதிகப்படியான கவர்ச்சியில் நடித்துள்ளார். படுக்கையறை காட்சியிலும் அவர் நெருக்கமாக இருக்கும் சீன்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின. இதற்காகவே இந்த படத்தை இளைஞர்கள் வெகுவாக ரசித்தனர்.
இந்தப்படம் தற்போது தமிழில் தாவுத் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவர உள்ளது. இதனை அறிந்த ஸ்ருதிஹாசன் கடும் அதிச்சி அடைந்தாராம். இதன் மூலம் தமிழ்ரசிகர்கள் மத்தியில் தனது இமேஜ் டேமேஜ் ஆகி விடுமோ என்று பயந்து தற்போது அந்தப்படம் தமிழில் ரிலீசாகக் கூடாது என்று அதை தடை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
என்னுடைய அனுமதி இல்லாமல் டி-டே படத்தை தமிழில் ரிலீஸ் செய்யக்கூடாது. மீறி வெளியிட்டால் அது என்னுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறியதாகும். அதனால் நான் அந்தப் படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார் ஸ்ருதி.
படத்தின் டைரக்டர் நிகில் அத்வானியும் எதிர்த்து உள்ளார்.
இதற்கு டி டே படத்தின் தயாரிப்பு நிறுவனமான டர்மோஷன் பிக்சர்சின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, டி டே படம் டப்பிங்கை எதிர்ப்பது நியாயமற்றது. சுருதிஹாசன் இப்படத்தின் நடிகை. அவருக்கு வேறு எந்த சம்பந்தமும் படத்தில் இல்லை. நிகில் அத்வானியுடன் ஒப்பந்தம் போட்ட படியே நடந்துள்ளோம். குறிப்பிட்ட படங்களை வெளியிடக் கூடாது என்றும் போஸ்டர்களாக ஒட்டக் கூடாது என்றும் விநியோகஸ்தர்களிடம் வலியுறுத்தி உள்ளோம். எங்கள் நிறுவனத்தின் மதிப்பை கெடுக்க முயற்சி நடக்கிறது. அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார்.
No comments: