Header Ads

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை: நீதிபதி குன்ஹாவுக்கு ராம்ஜெத்மலானி கண்டனம்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தது. 

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறும்போது, ‘

‘ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் நீதிபதி குன்ஹா நீதித்துறையில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். சட்டப்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. அபாராதம் விதித்ததில் குன்ஹா நீதிக் கோட்பாடுகளை மீறிவிட்டார். 

ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் வேண்டுமானால் இந்த தீர்ப்பை ஏற்கலாம். ஆனால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்க்கிறேன். 

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ற இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது’’ என்று கூறினார்.

No comments:

Powered by Blogger.