Header Ads

எங்களையும் சிறையில் போடுங்க... அமைச்சர்கள் பிடிவாதம்

பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின்பு ஜெயலலிதா மாலை 5.20 மணிக்கு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அங்கு வந்திருந்த தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என அனைவரும் சிறை வாசலில் திரண்டிருந்தனர். 
சோகத்தில் இருந்த அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம், ‘அம்மாவே உள்ள போயிட்டாங்க, எங்களையும் சிறையில் போடுங்க‘ என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் கோகுல இந்திரா, தரையில் அமர்ந்து அழுதார். பல அமைச்சர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி நின்றனர். நீண்ட நேரமாக கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கோஷமிட்டு கொண்டிருந்ததால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அவர்களை அங்கிருந்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஸ் இல்லாத அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு: பாஸ் இல்லாத யாரும் நீதிமன்றம் அருகிலேயே அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அமைச்சர் கள் அனைவரும் பெங்களூரில் முகாமிட்டிருந்தனர். நீதிமன்றம் அருகில் செல்ல பாஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ரமணா உட்பட 7 அமைச்சர்கள் மற்றும் ஈரோடு மேயர் மல்லிகா ஆகியோரிடம் பாஸ் இல்லை. அவர்களை பெங்களூர் போலீசார் நீதிமன்றம் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. இவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் பாஸ் இல்லாமல் யாரையும் அனுமதிக்கமுடியாது என போலீசார் மறுத்துவிட்டனர். இந்நிலையில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புக ழேந்தி இந்த விவகாரத்தில் தலையிட்டு பாஸ் இல்லாத அமைச்சர்களை உள்ளே அழைத்து சென்றார்.

No comments:

Powered by Blogger.