Header Ads

ஆடை பாதி, சர்ச்சை மீதி!

2008ம் ஆண்டு வெளியான 'சிவாஜி’ படத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின்போது அப்போதிருந்த முதல்வர் கருணாநிதியிடம்் பாராட்டு பெற மேடை ஏறிய ஸ்ரேயாவின் வெள்ளை கவுன் வெடிகுண்டு வதந்தியைக் காட்டிலும் சர்ச்சையைக் கிளப்பியது. 'ஸ்ரேயா கலாசாரத்தைக் கெடுக்கிறார்’ என்று இந்து மக்கள் கட்சி கோபப்பட்டு கோர்ட் படி ஏறியது.

 ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் பட விழாவில் அணிந்து வந்த டியூப் டாப் கவுனோ அடுத்த சர்ச்சையில் சிக்கியது. என்னதான் ஹாலிவுட் விழாவாக இருப்பினும் இந்தியப் பெண் தங்களது கலாசாரத்தை எப்படிக் கைவிடலாம் என சில இந்திய அமைப்புகள் கேள்வி எழுப்பின.



 யூத் ஹீரோயின்கள்தான் சர்ச்சையில் சிக்குகிறார்கள் என்றால், சீனியர் தேவியும் தன் பங்குக்கு சிக்கினார். 'லக்மே ஃபேஷன் வீக்’ விழாவில் தன் மகளுடன் ஷார்ட்ஸ்மேனியாக வர, ’இவங்க வயசுக்கு ஏன் இப்படி?’, ’தேவி மேல் இருந்த மரியாதையே போய்விட்டது’ என இணையத்தில் கதறினார்கள் பலர்.





 இந்த ஆடைப் பஞ்சாயத்தில் அடிக்கடி சிக்குவதில் மல்லிகா ஷெராவத்துக்கு நிகர் அவரேதான். 2005ல் நடந்த கேன்ஸ் விழாவில் மல்லிகாவின் பேக்லஸ் ட்ரெஸ் அடுத்த அவல். அந்த உடையில்  ஸ்டைலாக மல்லிகா தனது பின் பக்கத்தைக் காட்டி போஸ் கொடுக்க அதில் முன் பக்கமும் பாதி தெரிய நெட்டில் வைரல் ஆகி 'அய்யோ பத்திக்கிச்சு’தான்.

 மினி ஸ்கர்ட்டோடு வந்து மேடையிலேயே அலியாபட் குத்தாட்டமும் போட்டால் வடக்கத்தியப் பத்திரிகைகளும் இணைய இந்திவாலாக்களும் அதைப்பற்றியே பேசிப் பொழுதுபோக்குவார்கள். சரி ஒருமுறை முழுவதுமாக ஆடை அணிந்தால் என்ன என நினைத்து ஒரு பிரஸ்மீட்டில் இவர் அணிந்த பச்சை நிற மெல்லிய பாட்டியாலா பேன்ட், சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் ஹீரோ இவரைத் தூக்கிச் சுற்ற, அவ்வளவுதான் அலியா பட்டின் பேன்ட் 'பட்’ எனக் கிழிய, பார்த்தவர்கள் பதறிப்போனார்கள்.

அது சரி, சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு?

                                                                                                                           ஷாலினி நியூட்டன்

No comments:

Powered by Blogger.