Header Ads

அனிருத் இசையில் பாட்டு பாடிய விஜய்

விஜய்- சமந்தா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

விஜய் தனது முந்தைய படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டு வந்தார். அந்த வரிசையில், இந்த படத்திலும் விஜய் பாடப்போவதாக தகவல் வந்தது. அதன்படி கத்தி படத்துக்காக அனிருத் இசையில் ‘செல்பிபுள்ள...’ என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார். 

சமீபகாலமாக விஜய் பாடும் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி வருகிறது. ‘துப்பாக்கி’ படத்தில் ஆண்ட்ரியாவுடன் இவர் இணைந்து பாடிய, ‘கூகுள் கூகுள்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’,  ஜில்லா படத்தில் ‘கண்டாங்கி கண்டாங்கி’ ஆகிய பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்தன. அந்த வரிசையில் கத்தி படத்தில் விஜய் பாடிய ‘செல்பி புள்ள’ பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என நம்பலாம்.

No comments:

Powered by Blogger.