Header Ads

கொழும்பை அதிர வைத்த ஊடகவியலாளர் கொலை! நடந்தது என்ன? மோப்பநாய் தீவிரம்..

சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளரான மெல் குணசேகரவின் (வயது 46) சடலம் பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் உத்தரவின் பேரில் ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொலையாளி அல்லது கொலையாளிகளை கண்டுப்பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நுகேகொடை பொலிஸ் மோப்பநாய் பிரிவைச்சேர்ந்த ‘ரோஹி’ என்றழைக்கப்படும் மோப்பநாய் ஒரு கிலோமீற்றர் தூரம் மோப்பமெடுத்துச்சென்று அசோக சுற்றுவட்டத்திற்கு அருகில் நின்றுகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் துளையிடும் ஆயுதம், கத்தியின் கைப்பிடி வேறாகவும் கத்திவேறாகவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
journalist_AFP_004journalist_AFP_001

மெல் கொலை: 6 குழுக்கள் விசாரணை; சந்தியில் நின்றது ‘ரோஹி’

சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளரான மெல் குணசேகரவின் (வயது 46) சடலம் பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் உத்தரவின் பேரில் ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொலையாளி அல்லது கொலையாளிகளை கண்டுப்பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நுகேகொடை பொலிஸ் மோப்பநாய் பிரிவைச்சேர்ந்த ‘ரோஹி’ என்றழைக்கப்படும் மோப்பநாய் ஒரு கிலோமீற்றர் தூரம் மோப்பமெடுத்துச்சென்று அசோக சுற்றுவட்டத்திற்கு அருகில் நின்றுகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் துளையிடும் ஆயுதம், கத்தியின் கைப்பிடி வேறாகவும் கத்திவேறாகவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் ஊடகவியலாளரின் சடலம் மீட்பு
ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் (வயது 46) சடலம் பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலிருந்து சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளரான மெல் குணசேகரவின் பெற்றோர் தேவாலயத்திற்கு சென்றிருந்த வேளையிலேயே இவர் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீட்டின் சமையலறையிலிருந்தே அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொலை இடம்பெற்ற நேரத்தில் வீட்டிலிருந்த நாய் குரைக்காமையினால் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துசெல்கின்ற நாய்க்கு நன்றாக தெரிந்த ஒருவரே அவருடைய வீட்டுக்கு வருகைதந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், பிச் ரேட்டிங் வர்த்தக நிறுவனத்திலேயே இறுதியாக கடமாற்றியுள்ளார். ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான இவர் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளராக பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
journalist_AFP_002
மெல் கொலை: சிசிடிவி கமராக்கள் சோதனை
பத்தரமுல்லை, சுமத்திபுரவில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான மெல் குணசேகரவின் (வயது 46) வீட்டுக்கு அண்மையிலுள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களை சோதனை செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கொலையாளிகளின் தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தக துறைச்சார்ந்த பெண் ஊடகவியலாளரும் ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் ஊடகவியலாளருமான மெல் குணசேகர (வயது 46) பத்தரமுல்லை, சுபுத்திபுரவிலுள்ள தனது வீட்டின் சமையலறையிலிந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அவரது பெற்றோர் தேவாலயத்திற்கு சென்றிருந்த வேளையிலேயே அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சமையலறையில் பல இடங்களிலும் இரத்தம் சிந்தி கிடந்ததுடன் பாத்திரங்களும் அங்கிருந்த இதர பொருட்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்ததை அவதானிக்க முடிந்தது.
காலை 6.45 மணிக்கும் 8.50 மணிக்கும் இடையில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தேவாலயத்திற்கு சென்று திரும்பிய அவருடைய பெற்றோர், மகள் சடலமாக கிடப்பதனை கண்டு பத்தரமுல்லை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர். இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கொலை இடம்பெற்ற நேரத்தில் வீட்டிலிருந்த நாய் குரைக்காமையினால் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துசெல்கின்ற நாய்க்கு நன்றாக தெரிந்த ஒருவரே அவருடைய வீட்டுக்கு வருகைதந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த கொலையாளி அல்லது கொலையாளர்கள் வீட்டின் படலையை திறந்துகொண்டு உட்சென்றுள்ளதுடன் வீட்டின் பிரதான கதவிற்கு முன்பாகவுள்ள இரும்பிலான கிரில் மீது பாந்தேறியே வீட்டுக்குள் உட்சென்றிருப்பதாக தெரியவருகின்றது.
வீட்டில் அவர் மட்டும் தனிமையில் இருந்தபோது வீட்டிற்குள் புகுந்தவரை அல்லது புகுந்தவர்களை ஊடகவியலாளர் இனங்கண்டிருக்கலாம் என்பதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
இந்நிலையில், கொலையாளி அல்லது கொலையாளிகளை கண்டுப்பிடிப்பதற்கு நுகேகொடை பொலிஸ் மோப்பநாய் பிரிவைச்சேர்ந்த ‘ரோஹி’ என்ற மோப்பநாயை பொலிஸார் ஈடுபடுத்தினர். அந்த மோப்பநாய் ஒரு கிலோமீற்றர் தூரம் மோப்பமெடுத்துச்சென்று அசோக சுற்றுவட்டத்திற்கு அருகில் நின்றுகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் துளையிடும் ஆயுதம், கத்தியின் கைப்பிடி வேறாகவும் கத்திவேறாகவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் உத்தரவின் பேரில் ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அத்துடன்,ஸ்தலத்திற்கு வருகைதந்த கடுவளை பதில் நீதவான் கமல் விஜயசிறி பிரேத பரிசோதனை நடத்துமாறு பிரேத பரிசோதகருக்கு உத்தரவிட்டார். அதுமட்டுமன்றி இரசாயன பகுப்பாய்வு தடையவியல் அதிகாரிகளும் ஸ்தலத்தில் தடயங்கள் தொடர்பிலான தரவுகளை திரட்டிக்கொண்டனர்.
இவர், பிச் ரேட்டிங் வர்த்தக நிறுவனத்திலேயே இறுதியாக கடைமாற்றியுள்ளார். ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான இவர் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளராக பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அன்னாரது இறுதி கிரியைகள் தொடர்பிலான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவிருப்பதாக வீட்டார் தெரிவித்தனர்.

No comments:

Powered by Blogger.