Header Ads

சிம்புவுக்கு இன்னொரு ஜோடி: ஹன்சிகாவா?

சிம்பு படத்தில் நடிப்பதற்கு இன்னொரு ஜோடி தேடி வருகிறாராம் பாண்டிராஜ்.
சிம்பு ஹீரோவாக நடிக்க, சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்க, தம்பி குறளரசன் இசை அமைக்க, மாஜி காதலி நயன்தாரா நடிக்க, பசங்க பாண்டிராஜ் இயக்க இப்படி பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகிவருகிறது இது நம்ம ஆளு.

இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்த கட்டமாக பாடல் காட்சிகள் எடுக்க வேண்டும்.

இந்நிலையில் படத்தில் திடீரென்று நயன்தாரா கமிட்டாகி படத்துக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்ததைபோல அடுத்த அதிரடி இருக்கிறது.

கதைப்படி சிம்புவின் முதல் காதல் தோற்றுவிடும், காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என்று திரியும் சிம்புவுக்கு பெற்றவர்கள் நயன்தாராவை பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து விடுவார்கள். 6 மாதத்துக்கு பிறகுதான் கல்யாணம். அதுக்குள்ள லவ் பண்ணிக்குங்க என்பதுதான் பெற்றவர்களின் கண்டிஷன்.

அவர்களுக்கு லவ் வந்துச்சா வரலியா? லவ் வந்து கல்யாண நேரத்தில் பழைய காதலி திரும்பி வந்தாரா? என்ற கதையில் தற்போது சிம்புவின் முதல் காதலியாக நடிக்க இருப்பவர் யார் என்ற கேள்விகள் கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளன.

இதனால் தீவிரமாக ஹீரோயின் வேட்டை நடக்கிறது. இந்நிலையில் இதில் ஹன்சிகாவுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Powered by Blogger.