Header Ads

பாலியல் பலாத்காரம் செய்த தந்தை : பள்ளி மாணவி அளித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு

சொனெபட்: அரியானாவில் பள்ளி மாணவி ஒருவர்  கடந்த 4 மாதத்தில் 2 முறை மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் தனது தந்தையே தம்மை  பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ள புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.போலீசில் வாக்குமூலம் அளித்த அவர் இந்த அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். 

2 முறை பாலியல் பலாத்காரம் செய்த  மர்ம  கும்பல் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது தந்தையே அவரை பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்து விட்டதாக கூறியுள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் தந்தை தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்   இந்த சம்பவத்தை வெளியே கூறினால் தம்மை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும்  அவர் படிக்க ஆசைபடுவதாகவும்  ஆனால் அவரை விபச்சார தொழிலுக்கு அனுப்பு முயலுவதாகவும் கூறினார்.

தன்னார்வ குழு மூலமாக இப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவருடைய தந்தை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.  அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமது  தந்தையால் கற்பழிக்கப்பட்டதாலும் அவருடன் வீட்டில் இருக்க விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும்  அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும், தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுளார்.

இப்பொழுது தன்னார்வு குழு பாதுகாப்பில் இருக்கின்றார். பெண்ணின் தாயார் இதைப் பற்றி அறியவில்லை என்றும் தம்மிடம் இதைப்பற்றி எனது மகள் என்னிடம் கூறவில்லை, இப்பொழுது தான் அவள் என்னிடம் கூறினாள் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தெரிவித்தார். மேலும் அவர் தந்தைக்கு கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.     

No comments:

Powered by Blogger.