நயன்தாரா என் தோழி... ஹன்சிகா என் காதலி!” பளிச் சிம்பு...பரபரப்பு
காதலி’ ஹன்சிகாவுடன் பிரேக்-அப்(!), கௌதம் மேனனுடன் இரண் டாவது படம், 'முன்னாள் காதலி’ நயன்தாராவுடன் ரீ-யூனியன், தனுஷ§டன் நட்பு, தங்கை இலக்கியா திருமணம்... சிம்புவுடன் பேச எவ்வளவு விஷயங்கள் சேர்ந்துவிடுகின்றன. 'ஆன் த ரெக்கார்டு’ பளிச்சென்று பேசினார் சிம்பு!
''கௌதம் மேனன் படம் என்ன 'விண்ணைத் தாண்டி வருவாயா’ இரண்டாம் பாகமா?''
''இல்லை. இது 'வி.டி.வி.’ மாதிரி இருக்காது. ஆக்ஷன் படம். ஆனா, 'வி.டி.வி.’ ஃபீல்ல பிரமாதமான காதல் ஒண்ணும் இருக்கும். கௌதமோட திரும்ப வேலை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். ஆனாலும், பெரிய கேப் விழுந்திருச்சு. அதனால் விறுவிறுனு வேலையை முடிச்சு 'வாலு’ ரிலீஸ் பண்ணப்போறோம். கேமராவுக்குப் பின்னாடியும் ஹன்சிகாவோட கெமிஸ்ட்ரி செட் ஆன பிறகு நடிச்ச படம். பார்த்துட்டுச் சொல்லுங்க!''
'' 'இது நம்ம ஆளு’ படத்துக்கு ஹீரோயின் நயன்தாரா... யாரோட சாய்ஸ்?''
''என்ன சந்தேகம்? டைரக்டர் பாண்டிராஜ் சாய்ஸ்தான். 'நயன்தாரா நடிக்கிறாங்க’னு பாண்டிராஜ் சார் சொன்னப்ப, ஸ்பாட்ல ரெண்டு பேருக்கும் கம்ஃபர்ட் லெவல் எப்படி இருக்கும், மீடியாவில் என்ன எழுதுவாங்க, ரசிகர்கள் ரசிப்பாங்களா, வீட்ல என்ன சொல்லுவாங்கனு எந்த ஐடியாவும் இல்லை. 'பண்ணலாமா... வேணாமா?’னு ஒரு சின்னக் குழப்பம் இருந்தது. ஆனா, இப்ப ஆல் க்ளியர். இந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரும் ஏதோ ஒரு விஷயத்தை எதிர்பார்த்து எங்களையே பார்த்துட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. அதுவும் முதல் ரெண்டு நாட்கள்தான். அப்புறம் சரியாகிடுச்சு!''
''தங்கச்சி இலக்கியாவுக்குக் கல்யாணம். ஒரு அண்ணனா எப்படி ஃபீல் பண்றீங்க?''
''ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னொரு பக்கம் தங்கச்சி இனி நம்ம வீட்ல இருக்காதேனு ஃபீலிங்ஸா இருக்கு. அப்புறம், 'தங்கச்சிக்குக் கல்யாணமாச்சு... அடுத்து உனக்கு எப்ப?’னு என்னை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிடுவாங்களோனு பயமா இருக்கு!''
''அடுத்து, நீங்க பயந்த அதே கேள்விதான். உங்களுக்கு எப்ப கல்யாணம்? யாரோட கல்யாணம்?''
''நான் கல்யாணத்துக்கான ஆள் கிடையாதுஜி. நண்பர்கள், உறவுக்காரங்க கல்யாணத்துக்குக்கூட ரிசப்ஷன்ல மட்டும் தலையைக் காமிச்சுட்டு ஓடி வந்துடுவேன். கல்யாண அட்மாஸ்பியரே எனக்குப் பிடிக்காது. என்னமோ தெரியலை, கல்யாணம்னாலே ஜெயிலுக்குப் போற ஃபீலிங் வந்துடும். காதலும் கிட்டத்தட்ட ஜெயில்தான். ஆனா, அட்லீஸ்ட் அந்த ஜெயில் கதவோட சாவி நம்மகிட்ட இருக்கும். நினைச்சா, நாமளே கதவைத் திறந்துட்டு வெளியே வந்துரலாம். ஆனா, கல்யாணத்துல அது முடியாதே! வேற யாரோ நம்மளை உள்ளே வெச்சுப் பூட்டிட்டு, சாவியைத் தொலைச்சுடுவாங்க அங்கே! எனக்கு கல்யாணம் ஆகணும்னு இருந்திருந்தா, 19 வயசுலயே ஆகியிருக்கணும். ஆனா, இப்போ வரை தள்ளிப்போகுதுனா, எனக்கு கரெக்டான பொண்ணு வரணும்னு இருக்கு!''
''ஹன்சிகாவை கல்யாணம் பண்ணிப்பீங்கதானே!''
''எதுவுமே நம்ம கையில இல்லை. என்ன வேணும்னாலும் நடக்கலாம். யாருக்குத் தெரியும்? இப்போதைக்கு எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. ஒண்ணா இருக்கோம். அவ்வளவுதான்!
ஹன்சிகாகூட 'வேட்டை மன்னன்’ல முதல் தடவை சேர்ந்து நடிச்சப்ப, ஸ்கிரிப்ட்ல இருக்கிற வசனம் தவிர, ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா பேசிக்கலை. அவங்க மொபைல் நம்பர்கூட அப்ப என்கிட்ட இல்லை. ஆனா, ஒரு நாள் சாதாரணமாப் பேச ஆரம்பிச்ச நாங்க, பேசிட்டே இருந்தோம். இப்போ வரைக்கும் பேசிட்டே இருக்கோம். இந்த டிராவல் எதுவரைனு எங்களுக்கும் தெரியலை!''
''நீங்க நயன்தாராகூட நடிக்கிறது ஹன்சிகாவுக்குப் பிடிக்கலை. ஹன்சிகா அம்மாவுக்கும் உங்க காதல் பிடிக்கலை. அதனால உங்க லவ் பிரேக்-அப் ஆகிடுச்சுனு என்னென்னமோ செய்திகள்..!''
''நான் என்னைக்கும் என் ரிலேஷன்ஷிப்பை மறைச்சது கிடையாது. அதே மாதிரி அதுல பிரச்னைனாலும் நானே அதை வெளியே சொல்லுவேன். ஹன்சிகா அம்மாவுக்கு எங்க லவ் பிடிக்கலைனா, நாங்க எப்படி அடிக்கடி சந்திச்சுக்க முடியும்? ஹன்சிகாவுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப்பில் நயன்தாராவுக்கு எந்த ரோலும் இல்லை. இப்போ, சினிமாவில் ஹன்சிகா மத்த ஹீரோக்கள்கூட நடிக்கிறதை நான் தப்புனு சொல்ல முடியுமா? அப்படித்தான் நயன்தாரா என்கூட நடிக்கிறதையும் ஹன்சிகா பார்க்கிறாங்க. ஆனா, 'அது எப்படி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கலாம்?’னு டைஜஸ்ட் பண்ணிக்க முடியாதவங்கதான், கற்பனையான காரணங்கள் பரப்புறாங்க! ரொம்ப சிம்பிள்... நயன் என் தோழி. ஹன்சிகா என் காதலி!''
''காதல் பிரேக்-அப் ஆன பிறகும் சம்பந்தப்பட்ட பையன், பொண்ணுகூட நட்பா இருக்கிறது எப்படி? அனுபவத்துல இருந்து டிப்ஸ் கொடுங்களேன்!''
''அது சரியோ, தப்போ... உங்க வாழ்க்கையின் சில சேப்டர்களில் அவங்களும் இருந்திருக்காங்க. அதுக்கான மரியாதையைக் கொடுத்துதான் ஆகணும். இப்போ நம்ம பழைய டீச்சரைப் பார்க்கிறப்போ, சட்டுனு பரவசமாகி ஒரு சந்தோஷம் வரும்ல. டீச்சர் சொல்லிக்கொடுத்த சில விஷயங்களை நம்ம ஆயுசுக்கும் மறக்க முடியாதுல்ல! அப்படித்தான் முன்னாள் காதலன், காதலியும் நம்ம லைஃப்ல சில பரவசங்கள் கொடுத்திருப்பாங்க. சில பாடங்கள் கத்துக்கொடுத்திருப்பாங்க. நமக்காக நிறைய விஷயங்கள் பண்ணியிருப்பாங்க. அதுக்கான மரியாதையை என்னைக்கும் அவங்களுக்குக் கொடுக்கணும். அதை மட்டும் செஞ்சாலே போதும். இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, அவங்களைப் பத்தின நல்ல விஷயங்களை மட்டும் நினைச்சுப் பார்ப்போமே!''
''பெர்சனலா ரொம்பப் பக்குவமாப் பேசறீங்க. ஆனா, சினிமா ஸ்க்ரீன்ல இன்னும் குறும்புக்கார சிம்புதானே தெரிகிறார். 'வி.டி.வி.’ கார்த்தி மாதிரி நினைச்சு நினைச்சு ரசிக்கிற கிளாசிக் கேரக்டர்ஸ் பண்ணணும்னு ஏன் நினைக்க மாட்டேங்கிறீங்க?''
''நான் எதுக்கு அப்படி நடிக்கணும்? 'நான் செமத்தியா நடிப்பேன்’னு யாருக்கு நிரூபிக்கணும்? அப்படி நிரூபிச்சு என்ன சாதிக்கப்போறேன்? சரிங்க... அப்படியே ஒரு படத்துல செமையா நடிச்சா, என்ன கொடுப்பீங்க? மிஞ்சிப்போனா ஒரு நேஷனல் அவார்டு! அதை வெச்சுட்டு நான் என்ன பண்றது? 'தனுஷ் நேஷனல் அவார்டு வாங்கிட்டார். நீ எப்ப வாங்கப்போற?’னு என்கிட்ட கேட்கிறாங்க. 'நான் எதுக்கு அவார்டு வாங்கணும்? நான் நடிக்க வந்தது எதுக்கு? ஸ்க்ரீன்ல வரும்போது ரசிகர்கள் கைதட்டணும், விசில் அடிக்கணும். படம் முடிஞ்சு சந்தோஷமாப் போகணும். அந்தளவுக்கு என்டெர்டெயின் பண்றதுதான் என் வேலை. நான் நல்லாப் பாட்டுப் பாடுவேன், டான்ஸ் ஆடுவேன். எனக்கு ஜாலியா இருக்கப் பிடிக்கும். என் படங்களும் அப்படி இருக்கணும்னுதான் நினைப்பேன்!''
''லண்டன்ல ஜாலி ட்ரிப் அடிக்கிற அளவுக்கு தனுஷோட நட்பா இருக்கீங்க. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிப்பீங்களா?''
''அந்த மாதிரி கதை வரணும். அது அவருக்குப் பிடிக்கணும்; எனக்கும் பிடிக்கணும். ஆனா, அவர் ரூட் வேற, என் ரூட் வேற. ரெண்டு பேரும் அவங்கவங்க ரூட்ல தெளிவா இருக்கோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. ஃப்ரெண்ட்ஷிப் பக்காவா இருக்கு. நிச்சயம் அது தொடரும்!'
No comments: