ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை கைது செய்யும்வரை ஓயமாட்டேன்...பரபரப்பு
சென்னை : ஓய்வு பெற்ற சிபிசிஐடி டிஎஸ்பி கோகுல் சாகரின் மகள் பிரியதர்ஷினி (26). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2011ல் அளித்த புகார்:நான் ஐபிஎஸ் அதிகாரி ஆக விரும்பி அண்ணா நகரிலுள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். அங்கு திருச்சியை சேர்ந்த வருண்குமார் (28) அறிமுகமானார். எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. 2007ல் ஐபிஎஸ் படிப்புக்காக டெல்லி சென்றோம். அங்கு நெருக்கம் ஏற்பட்டு திருமணம் செய்ய முடிவுசெய்தோம். அவர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு என்னை திருமணம் செய்ய 2 கிலோ தங்கம், ரூ.50 லட்சம், பிஎம்டபிள்யூ கார் வரதட்சணையாக கேட்டார். ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை அடமானம் வைத்து அவரை படிக்க வைத்தேன். என்னை ஏமாற்றிய வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை. தற்போது, அருப்புக்கோட்டை உதவி கண்காணிப்பாளராக உள்ளார். இந்நிலையில், பிரியதர்ஷினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர் நல்லசிவத்திடம் மனு அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர், என்னை காதலித்து, திருமணம் செய்யாமல் மோசடி செய்த வருண்குமாரின் முன்ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் கடந்த 14ம் தேதி தள்ளுபடி செய்து விட்டது. ஆனால், இதுவரை வருண் குமாரை போலீசார் கைது செய்யவில்லை. அவரை கைது செய்யும்வரை ஓய மாட்டேன் என்றார்.
No comments: