Header Ads

மூதாட்டியை காப்பாற்றி இணையத்தில் ரியல் ஹீரோவாகிய இராணுவ வீரர்..... video

பிரித்தானியாவில் இராணுவ வீரர் ஒருவர் ரயில் பாதையில் விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை காப்பாற்றியுள்ளார்.
பிரித்தானியாவின் ஸ்ருட் ரயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் ரயில் பாதையில் விழுந்து, தப்பிக்க முடியாமல் போராடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பில்லி மெக்பெயில் (26) என்ற இராணுவ வீரர் உடனடியாக அந்த மூதாட்டியை காப்பாற்றியுள்ளார்.

மேலும் அருகில் சுற்றியிருந்தவர்கள், எதிரே வந்த ரயில் முன்னே சென்று ரயிலை நிறுத்துமாறு கூறியது அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மெக்பெயில் கூறுகையில், அனைவரும் கூச்சலிட்டு கொண்டிருந்ததாகவும், தான் காப்பாற்றவில்லை என்றால் அவர் இறந்துவிடுவார் என எண்ணி காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த மூதாட்டி காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Powered by Blogger.