Header Ads

சூர்யாவுடன் குத்து டான்ஸ் ஆட வருகிறார் சோனாக்ஷி

சூர்யாவுடன் குத்தாட்டம் போட வருகிறார் சோனாக்ஷி சின்ஹா. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் மும்பையில் நடந்தது. படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். இப்பட ஷூட்டிங்கின்போது சமந்தா வுக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டதையடுத்து படப்பிடிப்பு தடைபட்டது. சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்த சமந்தா ஷூட்டிங்கில் பங்கேற்றார். இந்நிலையில் சூர்யாவுடன் குத்தாட்டம்போட பாலிவுட் ஹீரோயின் ஒருவரை தேடிக்கொண்டிருந்தனர். தற்போது அந்த பாடலில் ஆட சோனாக்ஷி சின்ஹா ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, சூர்யாவுடன், சோனாக்ஷி சின்ஹா ஆடவுள்ள பாடல் காட்சி, அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கும்போது படமாக உள்ளது. சமீபத்தில் சோனாக்ஷியை சந்தித்த இயக்குனர் லிங்குசாமி, சோனாக்ஷியிடம் பாடலுக்கான சூழலை விளக்கி அவரிடம் கால்ஷீட் பெற்றார். நடிக்க ஒப்புக்கொண்டாலும் சோனாக்ஷி இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றனர்.

No comments:

Powered by Blogger.