Header Ads

பரேட்டா காமெடியனுடன் நடிக்க மறுத்த சிம்பு

சிம்பு நகைச்சுவை நடிகர் சூரியுடன் நடிப்பதற்கு முதலில் சம்மதிக்கவில்லை. ஏனெனில் சிம்பு சந்தானத்தை மனதில் வைத்து அப்படி கூறினார்.  சிம்பு சந்தானம் காம்பினேசன்  நன்றாக அமைந்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சந்தானத்தை முதன் முதலில் நகைச்சுவை நடிகராக மன்மதன் படத்தில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு.  இதை தொடர்ந்து  சிம்பு-சந்தானம் நண்பர்களானார்கள்.

நட்பின் அடையாளமாக  அடுத்தடுத்து தான் நடித்த படங்களிலும் சிம்பு சந்தானத்திற்கு நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.  நட்புக்கு இலக்கணமாக சந்தானம் தயாரித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் வந்து நடித்து கொடுத்தார். தற்போது பசங்க பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்த படத்தில்  இயக்குநர் பரோட்டா சூரியை காமெடியனாக நடிக்க வைக்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால் தானும் சந்தானமும் இணைந்து நடித்த படங்கள் ஏற்கனவே வரவேற்பு பெற்றுள்ளது. திடீரென்று காம்பினேஷனை மாற்றினால் சரியாக இருக்காது என்று சிம்பு கூறினார்.

அதற்கு பாண்டிராஜ், நீங்கள் சொல்வதும் சரிதான், இருந்தாலும்  நீங்களும் சூரியும் சூரியும் இணைந்தால் அது புதிய ஜோடியாக தெரியும். மிக பெரிய வரவேற்பும் இருக்கும் என்றார்.  இப்படத்துக்கான காமெடி காட்சிகளை சூரியை மனதில் வைத்துத்தான் எழுதி இருக்கிறேன். சந்தானத்துக்கு அது பொருந்திவராது.   நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பிறகு சூரியுடன் நடிக்க சிம்பு ஓ.கே. சொன்னாராம்.

No comments:

Powered by Blogger.