Header Ads

நஸ்ரியா- பஹத் பாஸில் ‘லவ்’ இல்லையாம்

நஸ்ரியா பஹத் பாஸில் இணைந்து நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் இயக்குனர்.
பஹத் பாசில், நஸ்ரியா நசீம் நடிக்கும் மலையாளப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் பெண் இயக்குனர் அஞ்சலி மேனன்.

சமீபத்தில் நஸ்ரியாவும், பஹத்தும் தங்கள் காதல் திருமணம் குறித்த செய்தியை இருவீட்டாரின் சம்மதத்தோடு அறிவிக்க, இவர்கள் இருவரும் இணைந்து தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு ‘எல் ஃபார் லவ்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாக மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், இப்படத்திற்கு இந்தப் பெயர் இல்லை என படத்தின் இயக்குனர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

‘எல் ஃபார் லவ்’ என்பது வதந்திதான், இன்னும் என் படத்திற்கு பெயர் வைக்கவில்லை என அஞ்சலி மேனன் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.