Header Ads

அனுஷ்கா பட டைட்டிலுக்கு திடீர் சிக்கல்

அனுஷ்கா நடிக்கும் படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் படம் பாஹுபாலி. 

நான் ஈ படத்தை இயக்கிய ராஜ்மவுலி டைரக்டு செய்கிறார். பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த ஜெயின் சங்க அமைப்பினர் பாஹுபாலி என்ற பெயரை பட தலைப்பாக பயன்படுத்தக்கூடாது என்று கேட்டு இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 

பாஹுபாலி எனப்படும் கோமதேஸ்வரா பெயரை புனித பெயராக நாங்கள் மதிக்கிறோம். வன்முறையில் எங்கள் மதத்தினருக்கு உடன்பாடு கிடையாது. வன்முறையை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஒரு படத்துக்கு இப்பெயரை வைக்க கூடாது.

எங்கள் சமுதாயத்தின் அனுமதி இல்லாமல் இந்த பெயரை சினிமாவில் பயன்படுத்தக்கூடாது. பாஹுபாலியின் வரலாற்று பின்னணியை அறிவதற்காக இப்பட குழுவினர் கர்நாடகாவில் தங்கி இருந்து தகவல்கள் சேகரித்ததுடன் அதனையொட்டி உள்ள பகுதிகளை யும் பார்வையிட்டுள்ளனர். 

10ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெயினர்களின் ஆதிபுராணத்தில் பாஹுபாலிபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே படத்தில் இவரது வாழ்க்கை வரலாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? அல்லது படத்தின் தலைப்பாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதா? என்று விளக்கம் அளிக்க வேண்டும். 

மேலும் இப்பெயரை பயன்படுத்தாமல் வேறு பெயரை படத்துக்கு வைக்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.