சிம்பு - நயன்தாரா கவுண்ட் டவுண் ஸ்டார்ட்!
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு - நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வல்லவன் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் நிஜ காதலர்களாக வலம் வந்தனர் சிம்பு, நயன்தாரா ஜோடி.
ஆனால் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு காதல் பிரேக் அப் ஆனது. இந்நிலையில் பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க தேவதை போன்ற ஹீரோயினை தேடிவந்த போது அவர்கள் கண்ணீர் சிக்கிய தேவதைதான் நயன்தாரா.
ஒரு வழியாக நயன்தாராவுடன் பேசி படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் வாங்கிவிட்டார் பாண்டிராஜ்.
இதற்காக பெரிய தொகை அவருக்கு சம்பளமாக தரப்படுகிறது. இதுவரை நயன்தாரா மட்டுமே நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது, நாளை முதல் சிம்பு, நயன்தாரா நடிக்கும் காட்சி படமாக்கப்படவுள்ளது.

No comments: