Header Ads

உதய்கிரண் தற்கொலையின் பின்னணியில் நான்கு குடும்பங்கள்!

தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலைக்கு நான்கு மிகப்பெரிய தெலுங்கு திரைப்பட குடும்பங்கள் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு முன்னணி நடிகரான உதய்கிரண் இரு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என இதுவரை தெரியாத நிலையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெலுங்கு சினிமா உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

2003ம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு அது பின்னர் நின்றுபோனது. ஆனால் என்ன காரணத்திற்காக அத்திருமணம் நின்றுபோனது என இதுவரை தெரியவில்லை.

ஆனால் இச்சம்பவத்திற்கு பின்னரே உதய்க்கு படவாய்ப்புகள் குறைந்து போனதாக தெரிகிறது.

தெலுங்கு திரையுலகின் முக்கிய குடும்பங்களான சிரஞ்சீவி, டக்குபட்டி, என்.டி.ஆர் மற்றும் டில் ராஜு ஆகியவை உதய் திரைப்படங்களில் நடிக்க முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியதாக கடும் குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில மனித உரிமை ஆணையத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருண்குமார் என்பவரும், அம்மாநில பிராமண சங்கத்தலைவர் துரோணம்ராஜு ரவிக்குமாரும் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

உதய்யின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த அவர்கள் பிராமண சமூகத்தை சார்ந்தவர் என்பதாலேயே உதய் பல்வேறு சமூகத்தின் மறைமுக தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டதாகவும், இப்படிப்பட்ட மறைமுக அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை முடிவுக்கு சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.