Header Ads

நடிகையுடன் பிரான்ஸ் ஜனாதிபதி கள்ளத்தொடர்பு.... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு!...

பிரான்ஸ் ஜனாதிபதி ஃபிரான்சுவா ஒலாந்த், நடிகை ஜூலி கேயட்டுடன் தொடர்பு வைத்துள்ளதாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் "குளோஸர்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
குறித்த பத்திரிகையின் சமீபத்திய இதழில், இந்த விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் 7 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகர வீதிகளில் ஒலாந்தே அந்த நடிகையுடன், மோட்டார் சைக்கிளில் சுற்றி நேரம் செலவழிப்பதாக குளோஸர் பத்திரிகை சில நாள்களாக இணையதளத்தில் தகவல் வெளியிட்டு வருகிறது.
பிரபல நடிகையான ஜூலி கேயட் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஒலாந்த் தற்போது பத்திரிகையாளரான வாலெரி ட்ரீயர்வெய்லருடன் வாழ்ந்து வருகிறார். 2012ஆம் ஆண்டு தேர்தலின்போது ஒலாந்துடன் கேயட் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக குளோஸர் பத்திரிகை மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள ஹொலாந்த், இது ஒருவரின் தனியுரிமை மீதான தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவர்களது தொடர்பு உறுதி செய்யப்பட்டால், ஜாக்சிராக், வாலெரி கிஸ்கார்ட் போன்ற திருமணத்தைத் தாண்டிய பந்தம் கொண்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதிகளின் பட்டியலில் ஒலாந்தும் இடம்பிடிப்பார்.

No comments:

Powered by Blogger.