Header Ads

துப்பாக்கி’ படத்தை அப்போதே எடுத்திருந்தா?

 
ழைய படங்களைத்தான் ரீமேக் பண்ணணுமா? ஒரு சேஞ்சுக்கு புதுப் படங்களை பிளாக் அண்ட் ஒயிட் காலத்துக்கு ரீமேக் பண்ணிப் பார்ப்போமே.  டைம் மெஷின்ல ஏறி சில ஆண்டுகள் பின்னோக்கிப் போகலாமா?
'துப்பாக்கி’ படத்தை அப்போதே எடுத்திருந்தா? எம்.ஜி.ஆர் ஹீரோ, சரோஜாதேவி ஹீரோயின், நம்பியார் வில்லனா நடிச்சிருப்பாங்க. ஊருக்குள்ளே ஒரு வீட்டுக் கூரையில் தீ வெச்சுட்டு ஓடுற கபாலியை, எம்.ஜி.ஆர் போலீஸிடம் பிடிச்சுக் கொடுத்துட்டு, கருப்புக் கண்ணாடியை மாட்டிக்கிட்டு ஸ்டைலா நடந்துவர்றார். இடையில் சரோஜாதேவியைப் பொண்ணு பார்த்துட்டு காதல் டூயட்னு பிஸியாகிறப்போ, இன்னொரு வீட்டுக் கூரையில் தீயை வைக்கப்போற மொட்டையைப் பிடிக்கிறார். ஊர்த் தலைவர் வீட்டையே கொளுத்தப்போறதுதான் அவங்க நோக்கம்னு போலீஸ் கான்ஸ்டபிள் நாகேஷ் உதவியோட கண்டுபிடிக்கிறார். மொட்டையனும் கபாலியும் மாட்டிக்கிட்டது தெரிஞ்ச ஸ்லீப்பர் செல் தலைவர் நம்பியார் டென்ஷனாகி எம்.ஜி.ஆரைக் கடத்திட்டு வந்து ஒரு கட்டுமரத்தில் ஏற்றிக் குளத்துக்கு நடுவில் கூட்டிட்டுப் போறார். 'என் தாய் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன் தைரியம் இருந்தால் கயிற்றைக் கழட்டிவிட்டுப் பார்’னு மாஸ் டயலாக் விடுறார். கயிற்றை அவிழ்த்ததும் எம்.ஜி.ஆர் கைக்குக் கத்தி (எப்பிடினு சில்லியா கேட்கக் கூடாது!) மொத்த ஸ்லீப்பர் செல்லையும் அழிச்சு ஊரைக் காப்பாற்றுகிறார் எம்.ஜி.ஆர். சொல்ல மறந்துட்டேன், ஆர்.எஸ்.மனோகர், அசோகன்னு எல்லா வில்லன்களையும் வீட்டு அலமாரியில வெச்சுப் பூட்டி, அப்பப்போ திறந்து பல அறிவுரைப் பாட்டுகள் பாடுவார் எம்.ஜி.ஆர்.
இப்போ '3’ படத்துல சிவாஜி நடிச்சிருந்தா, எப்படி இருக்கும்னு பார்ப்போம். ஸ்கூல் படிக்கும்போது ஒரு நாள் கால்ல முள்ளு குத்தி நடக்க முடியாம நிக்கிற வாணிஸ்ரீயைப் பார்க்கிறார். தன்னோட சைக்கிள்ல லிஃப்ட் தந்து ஸ்கூல்ல டிராப் பண்றார். அடுத்த நாளே தன்னுடைய ஃப்ரெண்டு நாகேஷோட, வாணிஸ்ரீயை ஃபாலோ பண்றார். ஒருவழியா வாணிஸ்ரீயும் ஓகே சொல்றாங்க. சிவாஜியோட அப்பா ஊர்லேயே பெரிய பண்ணையார்ங்கிறதால மகனுக்குத் தனி வீடு கட்டித்தந்து, நீ அவளைக் கட்டிக்கிட்டு அங்கே போயிடுனு ஆடம்பரமாக் கோபத்தைக் காட்டுறார். திடீர்னு ஒருநாள் அவர் தோப்பில் தேங்காய்கள் திருடு போய் பிசினஸ்ல பெரிய லாஸ் ஆகுது. இதை எல்லாம் அவர்கிட்ட தமிழ்லேயும் இங்கிலீஷ்லேயும் சொல்ற மேஜர் சுந்தர்ராஜன் மேல் கடுப்பாகித் தேங்காயை வெச்சு மேஜர் மண்டையை உடைக்கிறார் சிவாஜி. அதுக்கு அப்புறம்தான் சிவாஜிக்கு பைபோலார் டிஸ்ஆர்டர்னு ஒரு வியாதி இருக்கிறது தெரியவருது. தெரிஞ்சதும், எங்கே இதே மாதிரி வாணிஸ்ரீயையும் ஏதாவது பண்ணிடுவோமோனு பயந்து, நெருங்கி நெருங்கி வர்ற வாணிஸ்ரீயிடம் இருந்து விலகி விலகிப் போறார். இந்த பயம் அதிகமாகி அம்ம்ம்ம்மம்மா, நான் போறேன்னு லெட்டர் எழுதி வெச்சுட்டுத் தற்கொலை பண்ணிக்கிறார். 'ஒய் திஸ் கொலவெறி’ பாட்டுக்கு சிவாஜி டான்ஸ் ஆடுறதை மட்டும் கற்பனை பண்ணிப் பார்த்துடாதீங்க, ப்ளீஸ்!
'விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துல காதல் மன்னன் ஜெமினி கணேசன் கே.ஆர்.விஜயாவைப் பார்த்ததும் காதல்ல விழறார். 'இந்த உலகத்து மங்கை யாவரும் எனக்குத் தங்கை என எண்ணிக்கொள்கிறேன். உன்னைத் தவிர'னு புரபோஸும் பண்றார். ஆனா, அவங்க கோவிச்சுட்டு பாட்டி வீட்டுக்குப் போயிடுறாங்க. இவர்தான் காதல் மன்னனாச்சே. விடுவாரா... அங்கேயும் போய் லவ் டார்ச்சர் பண்றார். வெறுத்துப்போய் ஓகேனு சொல்லிடுறாங்க கே.ஆர்.விஜயா. இந்த விஷயம் தெரிஞ்சு கே.ஆர்.விஜயா அண்ணன் அசோகன் கே.ஆர்.விஜயாவுக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் பண்றார். ஆனாலும், கல்யாணம் பிடிக்கலைனு நிறுத்திடுறாங்க விஜயா. மறுபடி ஜெமினிகூட ரொமான்ஸ், சண்டைனு போயி கடைசியில நீங்க எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டுப் போறாங்க. ஜெமினி காதுல 'மயக்கமா கலக்கமா’னு பாட்டு கேட்குது. ஆனா, தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராம கே.ஆர்.விஜயா கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணி, அந்தக் கல்யாணத்துக்கு வர்ற சாவித்திரியைப் பாத்து உஷார் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிறார். க்ளைமாக்ஸ் எப்பூடி?

No comments:

Powered by Blogger.