Header Ads

விஜயகாந்திற்கு பொறுப்பு என்பதே இல்லை! சரத்குமார் காட்டம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொறுப்புடன் செயல்படவில்லை என்று சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், வேலூரில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். டெல்லியில் காங்கிரஸ் அரசு மீது இருந்த வெறுப்பு காரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்தது.

அந்த கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி வளர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், கலைத்துறையில் எனது நண்பர். ஆனால் அவர் அரசியலில் தனது கடமைகளை சரியாக செய்யவில்லை. பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக நடந்துகொள்ளவில்லை.

மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி என்றும், எனது தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி எனவும் மாறி மாறி பேசி வருகிறார். வரும் தேர்தலில் மீனவர் பிரச்னை, ஈழத்தமிழர் பிரச்னை போன்றவை மக்களிடம் எதிரொலிக்கும் என்று கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.