அந்த மாதிரி உறவுக்கு ஆதரவு தரும் ப்ரியாமணி
ஓரினசேர்க்கையாளர்களுக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளாராம் ப்ரியாமணி. ஓரினசேர்க்கையாளர்கள் பற்றிய படமாக இந்தி, ஆங்கிலத்தில் உருவானது ஃபயர். ஒரினச்சேர்க்கையாளர்களின் காதலை வைத்து உருவான இந்தப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் 2 இளம் பெண்களுக்கு இடையேயான தவறான உறவை சித்தரிக்கும் கதையாக தமிழில் உன் பேர் சொல்ல ஆசை என்ற படம் உருவாகிறது. காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வருவதுதானே தவிர பெண்ணுக்கும்,பெண்ணுக்கும் வருவது அல்ல. அப்படி வந்தால் அது தவறான உறவுதான் என்ற கருவை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஜீ.டி. இயக்கும் இப்படத்தை தாரிஸ்.பி.எஸ். தயாரிக்கிறார். ஷாலினி, சிவகாமி, பேசில், சத்தார் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னை, கோவளம், கேரளா போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. இதற்கிடையில் ஓரினசேர்க்கையாளர்கள் பற்றிய கலாசாரத்துக்கு ப்ரியாமணி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஓரின சேர்க்கையாளர்களை நாம் குறை சொல்லக்கூடாது. அத்தகைய சமூகத்தினரை நாம் ஆதரிக்க வேண்டும். இதற்கு எந்த துறையும் விலக்கில்லை என்று கூறியுள்ளார்.

No comments: