நடிகையின் நிபந்தனை!
நித்ய நடிகை புது படங்களை ஒப்புக்கொள்ளும்போது கூடவே மூன்று நிபந்தனைகளையும் விதிக்கிறாராம். ‘‘படக்குழுவினர் யாரும் என்னிடம் வந்து என் அழகை புகழ்ந்து பேசி, வழியக்கூடாது’’ என்பது முதல் நிபந்தனையாம். ‘‘வெளியூர் படப்பிடிப்புகளுக்கு ரெயிலில் பயணம் செய்ய மாட்டேன். விமானத்தில்தான் பயணம் செய்வேன்’’ என்பது இரண்டாவது நிபந்தனையாம். ‘‘கதாநாயகன் கன்னத்துடன் கன்னம் உரசி நடிக்க மாட்டேன்’’ என்பது மூன்றாவது நிபந்தனையாம்.
இத்தனை நிபந்தனைகள் விதிப்பதால், நித்ய நடிகைக்கு மிக குறைந்த அளவில்தான் படங்கள் ஒப்பந்தமாகின்றன!

No comments: