விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் உள்ளனர்: அவர் கடின உழைப்பாளி- மோகன்லால் பாராட்டு
விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படம் வருகிற 10–ந்தேதி ரிலீசாகிறது.
இதில் நடித்த அனுபவங்கள் பற்றி மோகன்லால் கூறியதாவது:–
ஜில்லா படத்தில் நடிக்க நான் சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதல் காரணம் விஜய். இரண்டாவது காரணம் படத்தை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ். மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது படத்தின் டைரக்டர் நேசன். மலையாளத்தில் நான் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தபோது தேடிப்பிடித்து கதை சொன்னார். கதை நேர்த்தியாகவும் எனது கேரக்டர் வலுவாகவும் இருந்தது. எனவே சம்மதித்தேன்.
இதில் விஜய் தந்தை கேரக்டரில் நடிப்பதால் எனது இமேஜ் பாதிக்காது. மதுரை பின்னணியில் மரியாதைக்குரிய கேரக்டராக வேடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதில் இரு ஹீரோக்கள் உள்ளனர். தமிழக– கேரள ரசிகர்களை இந்த படம் திருப்திப்படுத்தும். விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் ரசிகர்கள் பலம் உள்ளது.
இரு மாநிலங்களிலும் ‘ஜில்லா’ இனிய பொங்கல் விருந்தாக இருக்கும்.
விஜய்க்கு இந்த இளம் வயதிலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது. அது தன்னை ஆக்கிரமித்து கொள்ள அவர் அனுமதித்தது இல்லை. நிறைய நல்ல குணங்கள் அவரிடம் இருக்கிறது.
நேரம் தவறாமையை கடைபிடிக்கிறார். ஒழுக்கமாக இருக்கிறார். கடினமாக உழைக்கிறார்.
ஜில்லா படத்தை என் மனைவியுடன் பார்த்தேன். மனைவிக்கு மிகவும் பிடித்தது. ஜில்லா படத்தை வாங்கி கேரளாவில் 300 தியேட்டர்களில் நான் திரையிடுகிறேன்.
இவ்வாறு மோகன்லால் கூறினார்.

No comments: