Header Ads

ஜில்லா வழக்கு வாபஸ்

ஜில்லா படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் , தெலுங்கில் வெளியான பகீரதா என்ற படத்தை தமிழில் ஜில்லா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட தயாரித்துள்ளேன். ஜில்லா என்ற பெயரை 2008ல் முறைப்படி பதிவு செய்துள்ளேன்.

படத்தை வெளியிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படத்துக்கும் ஜில்லா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வர இருந்த இந்த வழக்கை மகேந்திரன் வாபஸ் பெற்று விட்டதால் ஜில்லா திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.

No comments:

Powered by Blogger.