நடிகை சுருதிஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி-கண்ணீரில் ரசிகர்கள்
நடிகை சுருதிஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி-கண்ணீரில் ரசிகர்கள்
சுருதிஹாசன்
சுருதிஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தார். சமீபத்தில் மும்பையில் இவர் மீது தாக்குதல் நடந்தது. வீட்டுக்குள் மர்ம மனிதர் அத்துமீறி நுழைந்து சுருதிஹாசனை தாக்கினார். பின்னர் அவனை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர்.
சுருதிஹாசன் தற்போது ஐதராபாத்தில் தங்கி இருந்து ரேஸ்குராம் என்ற படத்தில் நடித்து வந்தார். இவர் தெலுங்கில் நடித்துள்ள இன்னொரு படமான ஏவடு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
தெலுங்கு படப்பிடிப்பில் இருந்தபோது சுருதிஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் அவதிப்பட்டார். உடனடியாக அவரை ஐதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன

No comments: