குற்றச்சாட்டு பதிவு செய்ய காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: அமெரிக்க நீதிமன்றத்தில் தேவயானி மனு
அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே, விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவரை கைது செய்த அதிகாரிகள், அவரது ஆடைகளைக் களைந்து சோதனை செய்து அவமதித்துள்ளனர். அவர் மீதான வழக்கை வாபஸ் பெறும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியபோதும், வழக்கை கைவிட அமெரிக்கா மறுத்துள்ளது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் தேவயானியின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான காலக்கெடு வரும் 13-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவிற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு தேவயானி கோப்ரகடே நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குற்றச்சாட்டைப் பதிவு செய்ய மேலும் 30 நாட்களுக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், காலக்கெடுவை நீட்டிக்க அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டு பதிவு செய்த பின்னர் கூட தேவயானியின் மனு மீதான விவாதத்தை தொடரலாம் என்று அவர் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

No comments: