Header Ads

என் காதல் புதிது விமர்சனம்

நடிகர் : பிரமோத்நடிகை : உமாஸ்ரீஇயக்குனர் : மாரீஸ்குமார்இசை : புன்னகை வெங்கடேஷ்ஓளிப்பதிவு : சத்யதேவ்
சென்னையில் இருந்து ஊட்டியில் உள்ள கல்லூரிக்கு படிக்க செல்கிறார் நாயகன் ராம் சத்யா. அங்கு செல்லும் அவர் அதே கல்லூரியில் படிக்கும் நமீதா ப்ரமோத்தை கண்டதும் காதல் வயப்படுகிறார். தனது காதலை நாயகியிடம் அவர் வெளிப்படுத்த இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். 

இந்நிலையில், காதலித்து திருமணம் செய்துகொண்ட நமீதாவின் தோழி, அவளுடைய காதலன் போதைக்கு அடிமையாகிவிட்ட காரணத்தினால் அவனை பிரிந்து வருகிறார். அவளை திரும்பி அழைத்துப்போக வரும் தோழியின் அப்பா, இனிமேலாவது காதலிக்கும் நபரை சரியாக தேர்ந்தெடுங்கள் என்று நமீதாவுக்கு அட்வைஸ் செய்துவிட்டு போகிறார். 

தான் சரியான நபரைத்தான் காதலனாக தேர்ந்தெடுத்தோமா? என்ற சந்தேகம் அப்போது முதல் நமீதாவின் மனதுக்குள் தோன்றிவிடுகிறது. இந்நிலையில் கல்லூரியின் தேர்வுக்கான விடுமுறை வருகிறது. தன் காதலனின் நடவடிக்கையை அறிந்துகொள்வதற்காக அவரின் அறையிலேயே தங்கி படிக்க திட்டமிடுகிறார். தனது திட்டம் பற்றி சொல்லாமல் இருவரும் இணைந்து படிக்கலாம் என்று நமீதா கூறும் யோசனைக்கு ராம் சத்யாவும் ஓ.கே. சொல்கிறார். 

இருவரும் சத்யாவின் அறையில் தங்கி படித்துக் கொண்டிருக்கும்போது அவனது அறையில் பாலியல் உறவுகளுக்கான சில பொருட்கள் இருப்பதை பார்த்ததும் கோபமடைந்த நமீதா, சத்யாவிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க, அப்பொழுதுதான் அவள் தன்னை உளவு பார்க்க தன்னுடன் தங்கினாள் என்பதை அறிகிறான். இதனால், இருவருக்கும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு பிரிந்து போகின்றனர். 

ஊட்டியிலிருந்து சென்னை வரும் நாயகன் சத்யாவை மற்றொரு நாயகியான உமாஸ்ரீ ஒருதலையாக காதலித்து வருகிறார். சத்யாவை தன்னுடைய காதலானாக்க வேண்டும் என்ற முடிவில், முதலில் அவனிடம் உமாஸ்ரீ தோழியாகிறார். 

கடைசியில், சத்யாவை உமாஸ்ரீ தனது காதலனாக்கிக் கொண்டாரா? பிரிந்த தனது காதலியுடன் சத்யா மீண்டும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ராம் சத்யா கதாநாயகனுக்குண்டான அனைத்து அம்சங்களுடன் படத்தில் வலம் வருகிறார். காதல் காட்சிகளாகட்டும், நாயகியுடன் சண்டை போடுவதாகட்டும் நடிப்பில் களைகட்டுகிறார். 

நமீதா ப்ரமோத் மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உமாஸ்ரீ தோழமை காட்டுவதிலும், ஒருதலையாய் காதலிப்பதிலும் அழகாக நடித்திருக்கிறார். 

இயக்குனர் மாரீஸ்குமார் வழக்கமான முக்கோண காதல் கதையையே படமாக்கியிருக்கிறார். கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை சரியாக தேர்வு செய்திருக்கிறார். 

புன்னகை வெங்கடேஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை பரவாயில்லை. சத்ய தேவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பலம் கூட்டியிருக்கிறது. 

மொத்தத்தில் ‘என் காதல் புதிது’ புதிரானது.

No comments:

Powered by Blogger.