Header Ads

ஜில்லா படம் நாளை ரிலீஸ்: விஜய்யின் 80 அடி உயர கட்–அவுட்டுக்கு அபிஷேகம்

விஜய் நடித்த ஜில்லா படம் தமிழகம் முழுவதும் நாளை ரிலீசாகிறது. ஜில்லா படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ரசிகர்கள் விஜய்யின் கட்–அவுட்டுகள் அமைத்துள்ளனர். பேனர்கள், கொடி தோரணங்களும் கட்டி உள்ளனர். சென்னை பைலட் தியேட்டரில் விஜய்யின் 80 அடி உயர கட் அவுட்டை ரசிகர்கள் அமைத்துள்ளனர். 

இந்த கட்–அவுட்டுக்கு இன்று காலை பால் அபிஷேகம் நடந்தது. தியேட்டரில் விசேஷ பூஜைகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் என்.ஆனந்த் நிர்வாகிகள் ஆர்.ரவிராஜா,. சி.ராஜேந்திரன், ஏ.சி. குமார், பி.டி. செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க பொருப்பாளர் என்.ஆனந்த் இளைய தளபதி விஜய் வாழ்க என கோஷமிட்டார். இது போல் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களும் கோஷ மிட்டார்கள். 

தென் சென்னை தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் தி.நகர் க.அப்புனு, செயலாளர் ராயப்பேட்டை சண்முகம், யுவராஜ், கோபி, சந்திரகுமார், மயிலை விஜி, மாம்பலம் மகேஷ், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பூக்கடை எஸ்.குமார், ஆல்பர்ட் தியேட்டரில் விஜய்யின் 100 அடி நீள பேனர் அமைத்து கொடி தோரணங்கள் கட்டி உள்ளார். 

திருவள்ளூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் ரசிகர்கள் ஜில்லா படம் திரையிடப்படும் அம்பத்தூர் ராக்கி மற்றும் முருகன் தியேட்டர்களில் விஜய் கட்அவுட் மற்றும் கொடி தோரணங்கள் அமைத்துள்ளனர். காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர். சரவணன், தலைமையில் தாம்பரம் எம்.ஆர். தியேட்டரில் நகர தலைவர் பிரவீன் விஜய் உருவத்துடன் 160 அடி நீள பேனரும் செங்கல்பட்டு ராதா தியேட்டரில் நகர இளைஞர் அணி தலைவர் ஜின்னனு 35 அடி உயர விஜய் கட்அவுட்டும் தாம்பரம் எம்.ஆர். தியேட்டரில் மாவட்ட இளைஞர் அணி ஆலோசகர் ஜெ.குமரன் 35 அடி உயர விஜய் கட் அவுட்டும் அமைத்து இருந்தார்.

No comments:

Powered by Blogger.