போதையுடன் அமர்ந்திருக்கும் ஆண்கள் மத்தியில் கோடி ரூபாய் கொடுத்தாலும் கவர்ச்சி நடனம் ஆட மாட்டேன் : நித்யாமேனன் !
கோடி ரூபாய் கொடுத்தாலும் போதையுடன் அமர்ந்திருக்கும் ஆண்கள் மத்தியில் நான் கவர்ச்சி நடனம் ஆட மாட்டேன்’’ என்று நடிகை நித்யா மேனன் கூறினார்.
நடிகைகள் நடனம்:
ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் சில இந்தி நடிகைகளும், தெலுங்கு நடிகைகளும் நட்சத்திர ஓட்டல்களில் விடிய விடிய நடனம் ஆடி சம்பாதிக்கிறார்கள். அதற்காக துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள். இரவு முழுவதும் நடனம் ஆட பல கோடிகளை வாங்குகிறார்கள்.
கடந்த புத்தாண்டின்போதும் பெரும்பாலான இந்தி நடிகைகளும், தெலுங்கு நடிகைகளும் நட்சத்திர ஓட்டல்களில் நடனம் ஆடியிருக்கிறார்கள்.
நித்யா மேனன்:
இந்த நிலையில் நித்யா மேனனையும் நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆட அழைத்தார்களாம். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதுபற்றி அவரே சொல்கிறார்;
‘‘சினிமாவிலேயே ஒரு வட்டம் போட்டுத்தான் நான் நடித்து வருகிறேன். அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் எல்லை மீறியதில்லை. குறைவான சம்பளம் என்றாலும், மனதுக்கு பிடித்த வேடங்களில் நடிப்பதையே விரும்புகிறேன்.
அதனால்தான் ஓட்டல்களில் நடனம் ஆடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மது போதையுடன் ஆண்கள் கூட்டம் அமர்ந்திருக்க, அவர்களின் இச்சையான பார்வைகளுக்கு மத்தியில், கூச்சமே இல்லாமல் கவர்ச்சி உடையணிந்து என்னால் ஆட முடியாது.
அதனால்தான் பல கோடிகளை கொட்டிக்கொடுக்கிறேன் என்று சிலர் ஆசை காட்டியும், புத்தாண்டு கொண்டாட்டங்களில் நான் நடனம் ஆட மறுத்து விட்டேன்.’’
இவ்வாறு நித்யாமேனன் கூறினார்.

No comments: