விஜய் நடித்த ஜில்லா படத்தை திரையிட தடையில்லை- உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள ஜில்லா திரைப்படத்தை திரையிட தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜில்லா படத்தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2008-லேயே ஜில்லா என்ற பெயரில் படம் தயாரித்ததாக மகேந்திரன் மனுவில் தகவல் அளித்திருந்தார். விஜய் நடித்த ஜில்லா படத்தை வெளியிட்டால் தமக்கு இழப்பு ஏற்படும் என்று மகேந்திரன் மனுவில் கூறியுள்ளார். விஜய் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் மனுத் தாக்கல் செய்துள்ளதால் அதனை ஏற்க முடியாது என்றும் ஜில்லா படத்துக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

No comments: