கள்ள காதலுக்கு தடையை இருந்த மனைவியை கொன்று தூக்கில் மாட்டிய கணவன்
கள்ள காதலுக்கு தடையை இருந்த மனைவியை கொன்று தூக்கில் மாட்டிய கணவன்
திருவள்ளூர் சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சின்னப்பொண்ணு கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 5ம்தேதி தனது மாமியாருக்கு போன் செய்த சீனிவாசன்,உங்களது மகள் தவறி கீழே விழுந்து விட்டாள்‘ என தெரிவித்துள்ளார். இதனால் சின்னப்பொண்ணுவின் அண்ணன் கிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்தனர். பிறகு உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. சடலத்தை குளிப்பாட்டும்போது கழுத்தில் காயம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, சின்னப்பொண்ணு சாவில் மர்மம் உள்ளது. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சின்னப்பொண்ணுவின் அண்ணன் கிருஷ்ணன் மப்பேடு போலீசில் புகார் கொடுத் தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத் தினர்.அப்போது அவர் கூறுகையில், ‘‘எனக்கும் ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.
இதை மனைவி சின்னப்பொண்ணு தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்தேன். தரையில் விழுந்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இறந்துவிட்டார்.
போலீசாரை நம்ப வைக்க பிணத்தை தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தேன். மனைவியின் கழுத்தில் காயம் இருந்ததால் உறவினர்கள் கண்டுபிடித்துவிட்டனர்‘ என்றார்.
இவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது .இதற்க்கு அடுத்த காதலி தான் காரணம் எனவும் புதிய தகவல் கிடைத்துள்ளது.

No comments: