Header Ads

தமிழ் சினிமாவில் பீகார் சிறுமியின் வாழ்க்கை

ரவி என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட் செய்து வரும் படம் என்னதான் பேசுவதோ. டி.இமான் இசை அமைத்துள்ளார். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது மற்ற படங்களைப்போன்ற ரெகுலர் சினிமா அல்ல. வித்தியாசமான முயற்சி. அதுபற்றி டைரக்டர் ரவியே கூறுகிறார்...

"பீகார் மாநிலம் முஸார்பூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக குழந்தைகள் விற்கப்படுவது சர்வசாதாரணம். அதற்கென்றே தரகர்கள் இருக்கிறார்கள். அப்படி விற்கப்பட்ட ஒரு குழந்தையை விலைக்கு வாங்கும் ஒருவன். 

அதனை தமிழ்நாட்டின் குற்றாலத்திற்கு கொண்டு வந்து வளர்க்கிறான். அந்த குழந்தை வளர்ந்த பிறகு அதை தவறான வழியில் பயப்படுத்துவது என்பது அவன் திட்டம். இந்த விபரம் தெரியாமல் வளரும் அந்த குழந்தை வளர்ந்த ஆளான பிறகு தமிழ்நாட்டு இளைஞர்களுடன் நட்பாகிறது.

அந்த பெண்ணின் பின்னணி தமிழ் இளைஞர்களுக்கு தெரியவரும்போது அதனை எப்படி தடுத்து காப்பாற்றுகிறார்கள் என்கிற கதை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தக்ஷா நகர்கார் என்ற பீகார் பெண்ணே நடித்திருக்கிறார். அவர் காதலிக்கும் தமிழ்நாட்டு இளைஞராய் விஜய்ராம் நடித்துள்ளார். பீகாரில் உள்ள கிராமத்து மக்களையும், நிஜமான குழந்தை தரகர்களையும் நடிக்க வைத்திருக்கிறோம். இமான் இசையில் பீகாரி பாடல் ஒன்றும் இடம்பெறுகிறது. தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த மாத இறுதியல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

No comments:

Powered by Blogger.