Header Ads

சம்பளம் எனக்கு ரிஸ்க் இன்னொருவருக்கா : தலயின் வீரம்

வீரம் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா படத்தில் அஜீத்தின் சண்டை காட்சிகள் பற்றி அளித்த பேட்டி;

“நான் இதுவரை பணியாற்றிய படங்களிலேயே பெஸ்ட் வீரம் தான்.

பல ரிஸ்கான சண்டைக் காட்சிகள் இருக்கிறது. அதில் நடிக்க அஜீத் சார் போன்ற சாயல் கொண்ட டூப் நடிகரை ஏற்பாடு செய்து வைத்திருந்தேன்.

அஜீத் சார் டூப் இல்லாமல்தான் நடிப்பார் என்பது தெரியும். ஆனால் அவருக்கு ஆரம்பம் படத்தில் விபத்து ஏற்பட்டு காலில் பிரச்சினை இருப்பதால் இந்த ஏற்பாட்டை செய்திருந்தேன்.

இதை கேள்விப்பட்டு என்னை அழைத்த அஜீத் சார், “எல்லா காட்சியிலும் நான்தான் நடிப்பேன். எனது பாலிசியை மாற்றிக்கிறதா இல்லை.

சம்பளம் நான் வாங்கும்போது எனக்காக இன்னொருவர் ரிஸ்க் எடுக்க வேண்டுமா? அந்த ரிஸ்கை நானே எடுக்கிறேன். அதுக்குதான் எனக்கு சம்பளம் தர்றாங்க” என்று சொல்லிவிட்டு அவரேதான் நடித்தார்.

ரிஸ்கான காட்சிகளில் அவர் நடிக்கும்போது தைரியமாக நடித்தார். நாங்கள்தான் பயந்து நடுங்கினோம். ஒவ்வொரு காட்சி ஆரம்பிக்கும்போது கடவுளிடம் அவருக்கு எதுவும் நேரக்கூடாது என்று வேண்டிக்குவேன்.

முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்வேன். இதை கவனிக்கும் அஜீத் சார் என்னை பார்த்து சிரித்துவிட்டுச் செல்வார். வீரம் படத்தில் ரசிகர்கள் பார்க்கப்போவது அஜீத் சாரின் நிஜமான வீரத்

No comments:

Powered by Blogger.