த்ரிஷாவின் கனவுகள்!
வில்லி மாதிரியான கதாபாத்திரங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றேன் என்று கூறியுள்ளார் த்ரிஷா.
ஜோடி படத்தின் மூலம் திரையுலக பயணத்தை ஆரம்பித்த த்ரிஷா இன்று வரை திகட்டாத தித்திக்கும் கனியாக ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு படங்களை கொடுத்து வருகிறார்.
சினிமா உலகில் 12 வருடத்தை கடந்தாலும் த்ரிஷா என்றாலே ரசிகர்களின் மனதில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் தமிழ், தெலுங்கு என கலக்கி வந்த அவர் தற்போது கன்னட உலக ரசிகர்களின் தூக்கத்தையும் கலைப்பதற்கு தயாராகியுள்ளார்.
இந்நிலையில் அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனது ட்ரீம் ரோல் பற்றி கூறியுள்ளார். அதில், எவ்வளவு நாள்தான் நல்ல பெண்ணாகவே நடிக்கிறது. ஒரு மாற்றத்திற்கு கொஞ்சம் வில்லி மாதிரியான ரோல் நடிச்சுதான் பார்க்கலாம் என்று திட்டமிட்டுருக்கிறேன் என்று கூறியுள்ளார்

No comments: