ஸ்ருதியின் சின்சியாரிட்டி
அறுவை சிகிச்சை செய்து கொண்ட கையோடு நடிக்க சென்றுவிட்டார் ஸ்ருதி ஹாஸன்.
ஹைதராபாத்தில் பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதி ஹாஸனுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு குடல் வால் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஸ்ருதி ஹாஸன் மும்பைக்கு சென்றுவிட்டார். அங்கு அக்ஷய் குமாருடன் தான் நடிக்கும் கப்பார் படத்தின் படப்பிடிப்பில் நேற்று கலந்து கொண்டார்.
ஸ்ருதியின் நிலைமை குறித்து அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதற்கு ஸ்ருதி, எனக்காக பிரார்த்தனை செய்த, வாழ்த்திய ரசிகர்களுக்கு நன்றி ,மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறேன். அப்பெண்டிக்ஸுக்கு பை பை, ஹலோ நியூ இயர் என்றும் வலியை வெறுக்கிறேன் எனவும் டுவிட் செய்துள்ளார்.
.jpg)
No comments: