Header Ads

ரகசிய கணவருக்காக சான்ஸ் கேட்கும் அனன்யா

எங்கேயும் எப்போதும், நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. இருவருக்கும் ஆஞ்சநேயன் என்பவருக்கும் திருமணம்  நிச்சயமானது. ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று சர்ச்சை கிளம்பியதால் அனன்யா குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தினர். ஆனால்  ஆஞ்சநேயாவை மணப்பதில் அனன்யா உறுதியாக இருந்தார். இவரும் சில மாதங்களுக்குமுன் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டனர்.  திருவனந்தபுரத்தில் தனியாக வாழ்ந்தனர். ரகசிய திருமணத்தால் நடிப்புக்கு இடைவெளிவிட்டிருந்தார் அனன்யா. தற்போது அப்பிரச்னையிலிருந்து  மீண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். பரதன் இயக்கும் தமிழ் படத்தின் ஷூட்டிங்கில் அனன்யா கலந்துகொண்டார். இப்படத்தில் பாடகர்  பிரசன்னா ஹீரோவாக நடிக்கிறார். 

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, மலையாளத்தில் வெளியான காக்டெயில் என்ற படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. அப்படத்தில்  பஹத் பாசில், ஜெயசூர்யா நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்துக்காக சண்டை காட்சி படமாக்கப்பட்டது. விரைவில் படத்தை முடிக்க இயக்குனர்  திட்டமிட்டிருக்கிறார். மலையாள ரீமேக்காக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்களை இயக்குனர் செய்திருக்கிறார். இந்நிலையில்  ரகசிய கணவர் ஆஞ்சநேயனையும் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறாராம் அனன்யா. இதற்காக சில தயாரிப்பாளர்களிடம் அவர் கணவருக்காக  சான்ஸ் கேட்டிருக¢கிறாராம். 

No comments:

Powered by Blogger.