Header Ads

மதுரையில் பரபரப்பு மயக்க ஊசி போட்டு பெண் பலாத்காரம்

அவனியாபுரம்: கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் கீதா (24). மதுரை, வில்லாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கன்னியாகுமரிக்கு சென்றபோது கீதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பேரில் கீதாவை மதுரைக்கு வருமாறு பிரகாஷ் அழைத்துள்ளார். கீதா நேற்றுமுன்தினம் ரயிலில் மதுரை வந்துள்ளார். அவரை வில்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு பிரகாஷ் அழைத்து சென்றார். பின்னர் தன் நண்பர்கள் கார்த்திக், வீரமணி, முத்துவை செல்போனில் அழைத்துள்ளார். அவர்கள் வந்ததும் கீதாவுக்கு மயக்க ஊசி போட்டுள்ளனர். 

பின்னர் அவரை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதிகாலையில், வீட்டு வாசலில் மயங்கிய நிலையில் கிடந்த கீதாவை அருகே வசித்தவர்கள் மதுரை, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நினைவு திரும்பிய கீதா தன்னை 4 பேர் மயக்க ஊசி போட்டு பலாத்காரம் செய்ததாக அவனியாபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். 

புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறை வாக உள்ள 4 பேரையும் தேடி வருகின்றனர். மயக்க ஊசி போட்டு இளம்பெண்ணை 4 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.