Header Ads

கணவன் மது அருந்தினால் மனைவிக்கு கொடுமையா? பரபரப்பு தீர்ப்பு

கணவன் மது அருந்துவது, மனைவியை கொடுமைப்படுத்துவதாக கருத முடியாது என்று தானே நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த குமார் தரானந்த் என்பவர் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இவர், திருமண இணையதளம் ஒன்றின் மூலம் அகமதாபாத்தை சேர்ந்த ரீனா சர்மா என்ற பெண்ணை சந்தித்தார். இருவரும் காதலித்து, 2005 ஜனவரி 17ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் 6 மாதத்திற்குள் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ரீனா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

மேலும், தன் கணவருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கின்றது, ஆனால் அதை இணையதளத்தில் குறிப்பிட தவறி விட்டார் என்றும் வரதட்சணை கேட்டு தன்னை அடித்து கொடுமைப் படுத்துகிறார் எனவும் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குமாரையும் , அவருடைய பெற்றோர் மற்றும் தம்பியையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தானே முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில், கணவன் மது அருந்துவது மனைவியை அவர் கொடுமைப்படுத்துவதாக கருத முடியாது என்று கூறி, குமாரையும், அவருடைய குடும்பத்தினரையும் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

இந்த தீர்ப்பு பற்றி குமார் கூறுகையில், நான் கைது செய்யப்பட்ட பிறகு இந்த சமுதாயத்தை எதிர்கொள்ள முடியவில்லை. மனைவியை கொடுமைப்படுத்துபவன் என்ற கெட்ட பெயர் ஏற்பட்டது.

மேலும் நண்பர்களும் என்னை விட்டு விலகினர் என்றும் நீதிமன்ற உத்தரவு எனக்கு நிம்மதியை அளித்துள்ளது, இந்த சம்பவத்தை ஒரு கனவை போல மறக்க விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.