Header Ads

தலைதுண்டித்து கொல்லப்பட்ட இந்திய வீரர்: வீடியோ வெளியானதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

பாகிஸ்தான் எல்லை பகுதியில் அந்நாட்டு ராணுவத்தால் இந்திய வீரர் ஹேம்ராஜ் தலையை வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை விளக்கும் காணொளி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்திய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் அருகே ஹேம்ராஜ் என்ற இந்திய வீரர், பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றிய காணொளி காட்சி பேஸ்புக், யூடியூப் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர், இந்திய வீரர் ஹேம்ராஜை தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் அருகில் டார்ச் லைட் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் சிதறி கிடந்த காட்சியும் காணொளியில் உள்ளது.

இது தொடர்பாக ஹேம்ராஜ் மனைவி, தர்மாவதி, தாயார் மீனா தேவி ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் பாகிஸ்தான் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, இது வருந்ததக்க விடயமாகும். சமீப காலமாக போலியான காணொளி காட்சிகள் வெளியாகி வருகிறது என்றும் இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்த பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சிந்திக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.