Header Ads

காதலுக்கு டிவிட்டரில் நோ சொன்ன ஹன்சிகா

சிம்புடனான காதலை ஓப்பன் பண்ணாத வரைக்கும் டுவிட்டரை அதிகமாக பயன்படுத்தாத ஹன்சிகா, காதல் கசிந்த பிறகு அதிகமாக பயன்படுத்தி வந்தார்.
காதல் ரகசியத்தை டுவிட்டரில் உடைத்து வெளியிட்டதில் இருந்து, சிம்புவை பற்றியும், காதலை பற்றியும் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சூசகமாக பதிலுரைத்து வந்தார்.
ஆனால், சிம்புவின் மாஜி காதலியான நயன்தாரா, மறுபடியும் சிம்புவுடன் நடிக்கிறார் என்றதும், அதுசம்பந்தமாக ஹன்சிகாவிடம் எக்கச்சக்கமான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தார்கள் ரசிகர்கள்.
சில நாட்களாக, அவர்கள் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. நானும் ஒரு நடிகை என்ற முறையில், அது எனக்கு தவறாக தெரியவில்லை.
மேலும், சிம்புவிற்கும், எனக்குமிடையிலான காதல் ரொம்ப உறுதியாக உள்ளது என்றெல்லாம் பதில் கொடுத்துப்பார்த்தார். ஆனால், ரசிகர்களின் கேள்விக்கணைகள் அதன்பிறகு படுபயங்கரமாக இருந்ததால் சில மாதங்களாக டுவிட்டரை பயன்படுத்துவதையே நிறுத்தியிருந்தார் ஹன்சிகா.
இந்த நிலையில், மறுபடியும் அவர் டுவிட்டர் பக்கம் திரும்பியிருக்கிறார். ஆனால், இந்த முறை தனது காதல் பற்றிய கேள்விகளுக்கு அவர் யாருக்கும் பதில் கொடுக்கப்போவதில்லையாம். தன்னைப்பற்றியும், தான் நடிக்கிற படங்களைப்பற்றிய தகவல்களை மட்டுமே ரசிகர்களுடன் பகிரிந்து கொள்ளப்போகிறாராம்.

No comments:

Powered by Blogger.