சிவகார்த்திகேயனின் காதல் ரசம்
மான் கராத்தே’ படத்தில் ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் களமிறங்கியுள்ள படம் மான் கராத்தே.
இப்படத்தில் இவருக்கு ஜோடி போட்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி, திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறேன்.
வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் டாக்டராகணும், என்ஜினீயராகணும்னு கனவு இருக்கிற மாதிரி மான் கராத்தே படத்துல அழகா சிகப்பா ஒரு பெண்ணை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கனுங்கற கனவுல திரிவேன். அப்பதான் ஹன்சிகாவை கண்டுபிடித்து வெறித்தனமாக காதலிக்க ஆரம்பிக்கிறேன்.
அவங்க நாயை விட கேவலமா விரட்டி விரட்டி விடுவாங்க. ஆனால நான் விட மாட்டேன். அதைவிட கேவலமான ஐடியா போட்டு அவுங்கள எப்படி இம்ப்ரஸ் பண்றேங்றதுதான் கதை.
மேலும் கடுமையான உழைப்பும் முயற்சியும் இருந்தா மொக்க பசங்களால கூட ஹன்சிகா மாதிரி அழகு பெண்களை காதலிக்க முடியும்னு தன்னம்பிக்கை கொடுக்குற படம் தான் மான் கராத்தே என்று கூறியுள்ளார்.
No comments: