Header Ads

வீரம்... 'பட்டையைக் கிளப்பும் பொங்கல் விருந்து!' - ரசிகர்கள் உற்சாகம்

அஜீத்தின் வீரம் படம் குறித்து பார்த்த பலரும், இது அஜீத் படமில்லை.. ஹரி படம் மாதிரி பரபரவென போகிறது என பாராட்டு தெரிவித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்களில் ஒருவரான செல்வகுமார், 'அசல், பில்லா, ஆரம்பம், னு கோட்டு சட்டையோட மொரைச்சிகிட்டே திரிந்த அஜித்தை சும்மா கல கல னு வேறமாதிரி மாத்தி படத்தையும் குடும்பத்தோட பாக்கிற மாதிரி கொடுத்த 'வீரம்' சிவாவை பாராட்டலாம்..', என்கிறார். (வீரம் படங்கள்) பாசக்கார அண்ணன் அஜீத் விநாயகம்.... அவருக்கு மூன்று பிரதர்ஸ். அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் வீராதி வீரர்கள். மனைவி வந்தால் தம்பிகளைப் பிரித்து விடுவார் என்பதால் திருமணமே வேண்டாம் என தம்பிகளோடு வாழ்கிறார் அஜீத். அண்ணனுக்கு திருமணம் நடந்தால்தான் தங்களுக்கு திருமணம் நடக்கும் என்பதால் தங்களுக்கான அண்ணியைத் தேடுகிறார்கள் தம்பிகள். எப்படித் திருமணம் நடந்தது என்பது மீதிக் கதை. -படம் பார்த்தவர்கள் சொன்ன கதை இது. படத்தில் இவருக்குத்தான் முக்கியத்துவம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அண்ணன் தம்பிகள் நால்வருக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்களாம். படம் முழுக்க அஜீத்தின் நடிப்பும் உடல் மொழியும் மிரட்டலாக உள்ளது. தமன்னா அழகு, சந்தானம் காமெடி எல்லாமாகச் சேர்ந்து பொங்கலுக்கு பக்காவான விருந்தாக இந்தப் படம் அமைந்துள்ளது என ரசிகர்கள் தெரிவித்தனர். அஜீத்தை வைத்து ஹரி ஒரு அதிரடி படம் எடுத்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது வீரம்...- இது வீரம் பார்த்த ரசிகர்களின் தீர்ப்பு. நம்ம தீர்ப்பை நாளைக்கு சொல்றோம்! 

No comments:

Powered by Blogger.